பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/617

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
597


எனப் பாலிகையை இதற்கொரு பெயராகக் காட்டின. அக்ர முதலி களிலும் பாலிகை என்னுஞ் சொல்லுக்கு அடும்பு என்னும் பொருளைக் காண்கின்றோம். கடற்கரையில் குலவும் தலைவனும் தலைவியும் இக்கொடி படர்ந்த மேட்டில் அமர்ந்து களிப்பர். அதுபோது அவன் அவளது கூந்தலில் இப் பூவைக் கோதையில்சூட்டுவான். இதனை 'மாக்கொடி அடும்பின் மாயிதழ் அலரி கூந்தல் மகளிர் கோதை கூட்டும்' - என்றும், 'ஆய்பூ அடும் பின் அலர்கொண்டு, உதுக்காண் கோதை புனைந்த வழி' - என்றும் பாடினர். மகளிரும் இம்மலருடன் நெய்தல் மலரைத் தொடுத்த கோதையைக் கூந்த லில் சூடுவர். எனவே, இது சூடும்பூவாகும். குறிஞ்சியிலும் இடம் பெற்றது. 'அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்' எனச் சிவன் தலையிலும் ஏறியது. 29. பொங்கு அழல் மலர். முருக்கு. 'மணமற்ற செம்முருக்கது பூத்து அலர்ந்தென்ன? மலராது போகிலென்ன?' - என்றார் அறப்பளிகர சதக அருணாசலக் கவிராயர். முருக்க மலர் மணமற்ற மலர். அதனால் சூடப்படாமல் பயனற்ற மலர். அப்பயனற்றதை, - 'உதவாத பேர்க்கு வெகுவாழ்வு வந்தாலென்ன? ஓங்குமிடி வரிலென்ன?" - எனும் ஒரு கருத்துரை விளங்கப் பயன்படுத்தினார். முருக்க மலர்பற்றிய பிற்காலப் பார்வை இது, முற்காலப் பார்வை எத்துணையோ வண்ணனை களை விளைவித்தது; உவமைகளை வழங்கியது. அவற்றின் மூலம் செடியியல் எண்ணங்களைத் துாண்டியது. சங்கப் புலவர் பலர் இதன் நனை முதல் மலர்வரை தம் பார்வையைப் பதித்துப் பல பாட்டோவியங்களைத் தீட்டினர். அவற்றைப் படிப்படியாக அடுக்கினால் ஒரு தொடர் ஒவியமாகும். 1 நற் : 145 : 2, 8. 4 அப், தே காட்டுப் .ே 2 கன் : 144 : 30, 31, 5. அறப், 22: لم کنسو: 400 : بي بي 8