பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/620

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
600


நல்ல மலர்ச்சியின்போது இதன் புறவிதழ் மஞ்சள் நிறம் பெறும். இதன்மேல் சிவந்த அகவிதழ் தோன்றுவதைப் பொற்றாலி என்றார். செல்வச் சிறுவர்க்கு ஐம்படைத்தாதி செய்துகொடுக்கும் பொற்கொல்லர் போலப் பூத்ததாம்.1 இதனையே அடுத்த பாட்டிலும் 'பொன்னுறு உறுபவளம் போன்ற புணர்முருக்கம்' என்றார். இப்பவள இதழ் மகளிரது செவ்வாய்க்கு ஈடாயிற்று. இதன் செம்மை போதாதென்று இதற்கும் செந்துாரவண்ணமூட்டி “முருக்கிதழ் குலிகம் ஊட்டி வைத்தன்ன முறுவற் செவ்வாய்"3 என்றார் திருத்தக்க தேவர், மகளிரது இயல்பான இதழ்ச் செம்மை மேல், தம்பலம் தின்றதால் ஏறிய சிவப்பையும் கருதினார் போலும். வளையாபதி ஆசிரியரோ கணிகையரை "முருக்கலர் போற் சிவந்து ஒள்ளியர்" என்றார். இவ்வாறாக, முருக்கமலர் புலி நகமாக, மகளிர் நகமாக, பொங்கு அழலாக, எரி சிதறியதாக, யானை பொழி நெருப்பாக, சேவற் பிடரியாக, அரக்காக, பவளமாக, மகளிர் செவ்வாயாக, அவர்தம் உடலாக வண்ணிக்கப் பெற்றது. முருக்க மலர்க் கருத்துகள் யாவும் பாலைத்தினைப் பாடல் ஆளிலேயே அமைந்துள்ளன. பாலைபாடிய பெருங்கடுங்கோ இதனை "வெங்காட்டு”டன் குறித்தார். எனவே இது பாலை நில மலர். பொங்கழல் முருக்கு மலர 'இளவேனில் வந்தது' ான்றும் 'முருக்கரும்ப ...இளவேனில் காண்டொறும்' என்றும் இம்மலரின் பருவம் இளவேனிலாகக் கண்டு காட்டியுள்ளனர். இக்காலத்தும் இது பொருந்துவதே. இளவேனிற் காலத்தில் குயில் இதன் இதழ்களைக் கோதித் தின்னுமாம். இளவேனிற் பருவத்திலும், . "வைகுபுலவர் விடியல் மைபுலம் பரப்ப, கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கு'ே - -என்றபடி விடியற்போதில் மலரும். 1 திண்ை, துர் 6ே, 61, 5 அக்ம் : 277 :18, 2 திணை. நூ : 65, 67, 6 ஐந், ஐ : 31 : சில, சி ; 1454 7 அகம் :229 , 16 அவை : 82 - 8 அகம் : 41 : 1, 2,