பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

601

- 'நாராப் பூவும் தேவருக்காம்" -என்றபடி எம்மல்ன்ர் யும் தம்மலராகக் கொள்ளும் சிவன் முடியில் இம்மலரையும் குட்டினர். எருக்கொடு முருக்கும்... ... ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம்மடிகள்’’’ என்று ஞானசம்பந்தரும் பாடினார். இம்மலரைத் தரும் மரம் முள் கொண்டது. 'செம்முகை அவிழ்ந்த முண்முதிர் முருக்' கெனச் சங்க இலக்கியத்தில் ஒரிடத்தில் மட்டும் கண்டாலும் இன்றும் கண்ணால் கானும் இம்மரம் முள்ளைக் காட்டுகின்றது. இம்மரம் உறுதியற்றது; செறிவில்லாதது; பளுவில்லாதது. யாழின் பத்தர் செய்யப் பயன்பட்டது. வேல் வீசியும் அம் பெய்தும் பயிற்சி பெறுபவர் இம்மரத்தைக் குறிப்பொருளாகக் கொண்டனர். கோசர் இவ்வாறுபயின்றதைக் காரிக்கண்ணனார்க் பாடியுள்ளார். படிவ உண்டிப் பார்ப்பன மகன் தனக்கு வேண்டிய கைத்தண்டை இம்மரத்தால் செய்து கொள்வதைக் குறுந்தொகை காட்டு கின்றது. மரம் இவ்வாறு இசைத்துறைக்கும், போர்த்துறைக்கும், ஆன்மத் துறைக்கும் பயன்படினும் மணங்கமழாத ஒன்றால் ஒரு குறையாகப் பேசப்படுவதுண்டு. குடப்படாமையால் குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. பாரதியார் தமது தேசியப்பாடல் களின் முன்னுரையில், தேவலோகப்பாரிசாதமலர்கள் சூடத்தகுதிகொண்ட திருவடிகட்கு எனது மணமற்ற முருக்கம் பூக்கள் அணிக் குறையை விளைக்கும்' -என முருக்கமலரை மணமற்ற தாற் குறையாக எழுதினார். எதற்கு எழுதினார்? அவையடக்கத் திற்கே எழுதினார். முருக்க மலராக அவரே கூறிய அவரது பாடல்கள் சிறப்பற்றனவா என்ன? அவர்தம் பாடலுக்குவமையான தாலும் முருக்க மலர் குறிப்பிடத்தக்க இலக்கியத் தகுதியுள்ள மலரேயாகும். 1 புட்ப வி 84 2 சூான தே: அச்சிறு 7 3 அகம் 99 12 i β ف

I

6 g