பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606


இஃதன்றி, அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி' என ஆடவர் ஒப்பனைக்காக அணித்ததையும் காண முடிகின்றது. மகளிரும், அணிந்து 'காரி ஆவிரைக் கிளர் பூங் கோதை வண்ண மார்பில் வனமுலை துயல்வர' விளங்கியுதை யும் காண்கின்றோம். பிங்கல நிகண்டு மட்டும் இதற்குப் பகரி' என்றொரு பெயரைப் பகர்கின்றது. - ஒருவகை நெல் ஆவாரம்பூச் சம்பா என்று பெயரிடப் பட்டுள்ளது. ஆவிரம் பூ மருத்துவத்தில் நற்பயன் தருவது. நீரிழிவை நீக்கி, உடலைப் பொன்னொளியாக்கி, - '-அங்கத்தாம் (உடலுறுப்பின்), மாவைக் (உப்பழுக்கை) க ற் றா ைழ மனத்தை அகற்றிவிடும், பூவைச்சேர் ஆவாரம் பூ’ -என்றது அகத்தியர் குணபாடம். இதன் பூவால் இன்சுவைக் கறுக்கு நீர் உண்டாக்கிப் பருகுவர். இதன் வித்தும் இதற்குப் பயன்படுத்தப்படும். இப் பூ இதழைத் தேனில் இட்டுக் குல்கந்து செய்து உண்பர். இவற்றால் குளிர்ச்சியும் உடல் வலிவும் பெருகும். இஃது எளிய மாந்தர்க்குப் பொன்னூட்ட உணவாகும். இத்துணை நலந்தரும் இது காட்டுப் பூவாயினும் சுட் டொளிரும் பொன்னொளி கொண்டமையால் களரிப்யொன்மலர்', 32. மழைத் துளி மலர். 笛町。 (தேமா, கவிமா.) 'மணப்பெண் கருப்பா, சிவப்பா? 'மா நிறம்' -இவ்வுரையாடல் நாட்டுப் பேச்சில் நாம் கேட்டுப் பழகியது. மாநிறம் என்றால் எந்நிறம்? மா மரத்து இளந் தளிரின் நிறம். இது கருப்பும் சிவப்பும் கலந்த கருஞ்சிவப்பில் ಆಹà: 801 14, 15, 2 பிங். நி 2862