பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/628

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
608


"... ... ... ... கழனிக் கருங்கோட்டு மாஅத்த அலங்குசினைப் புதுப் பூ மயங்கு மழைத் துவலையில் தாஅம் -ான மழைத்துளி வீழ்வது போன்று உதிரும் எனப்பாடினார் பரணர். இப்பூ சிறிய மழைத்துளியின் அளவினதாகும். எனவே, இதனை மழைத் துளி மலர்' எனலாம். இம்மலர் மெல்லிய மனங்கொண்டது. கூடிப் புணர்ந்த தூய காதலர் உடல் பூரித்து மணக்கும். அம்மனத்தை இம் மணத்திற்கு உவமையாக்கி ஒரம்போகியார் 'எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருந்சினை புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும்2 என்றார். இது கொண்டே போலும் காமவேளின் மலர்க்கனைகளில் மாம் பூவும் இணைக்கப்பட்டது. இப் பூங்கணை தைத்தால் 'ஒள் குதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்' என்று அம்பலவாணக் கவிராயரும், * நீள் பசலை மாம் பூ' என ஒரு புகழேந்தியாரும் பாடினர். இம்மரம் அனைத்து நிலத்திலும் இடம்பெற்றது. ஆயினும் மிகுதியம் மருதநிலக் கருப்பொருளாகவே காணப்படுதலின் இது மருத நிலப் பூவாகும். இளவேனிலில் தளிர் தோன்றி வேனிலில் பூக்கும். மாமரத்தில் கனிமரம் என்றும், வடு, காய் மரம் என்றும் இக்காலத்தும் வழங்குவர். இதனை இலக்கியங்களும் காட்டு கின்றன. தேமா’ என்பது தேம்-சுவையுடைய-மா எனக் கணி மரத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் தேமா' என்னும் பெயர் ,... . ...பலவின் கனியும் வேறுபடக் கவினிய தேமாங்கனியும்'5 எனக் கணித் தொடர்புடனேயே மிகப் பல இடங்களில் குறிக்கப்படுகின்றது. ஆங்கிலத்திலும் தேமா என்பதை SWEET MANGO என்றனர். 'மா' என்னும் பெயர், "நறு வடி (வடு) மாவின் பைந்துனர் 6 -என வடுவின் தொடர்புடனே பல்லிடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வகை வேறுபாட்டால் இருவகைப் பூவிலும் சிறிதளவு வேறுபாடு உண்டு. 1 努sá :236 : 6-8 4. இ. சு. :16 2 ஐங் : 19, 5 மது. கா : 527, 528) 8. அறப், ச :90 2 8 தலி: 1 : 44