பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

609


ஒரே வகையில் சிறிதளவு வேறுபாடு கொண்ட மலர்களைத் தனித்தனியாகக் காந்தள்-தோன்றி-கோடல் என்றும், "கட்கமழ் நெய்தல்-மணிப்பூ நெய்தல்' என்றும் பாடியமை போன்று இம் மாவையும் கபிலர் "தேமா' (குறி, பா : 64) "கடிகமழ் கலிமா' (குறி : பா : 76) என இரு வகையாகப் பாடியுள்ளார். இவற்றில் கலிமா என வடுச் சிறப்புடையதைத் தழைத்த தாகவும், கடிகமழ் என மணங்கமழ்வதாகவும் குறித்திருப்பதும் நாட்டு நடப்பிலும் பொருத்தமாக உள்ளன. தேமாங்காய், தேமாங்கனி, தேமாந்தண் பூ தேமாநறும்பூ என்றெல்லாம் யாப்பிலக்கணத்தில் மூவசை நான்கசைச் சீர்களின் பெயர்களாக இத் தேமா அமைந்தது, 33. நாறா வெண் மல்ர். கரும்பு. அதியமான் முன்னோர் கரும்பைக் கொண்டு வந்து பயிரிட்டதாக அவ்வையார் பாடினார். அவர் வானத்துஅமிழ்தம் போன்ற சுவைச்சாறுடைய கரும்பை இங்கு தந்தனர்' என்றார். இப்பாட்டின் பழைய உரைகாரர் வானம் என்பதை அமிழ்தத் திற்கு அடைமொழியாக்காது கரும்பிற்கு அடைமொழியாக்கிக் 'கரும்பை விண்ணுலகத்தினின்றும் கொண்டுவந்து' என்று, கதை கட்டினார். எவர் ஏற்றாலும் செடியியல் அறிவு ஏற்க இயலாதது இது. எனவே, வேறு புலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்பதே கருத்து. அப்புலம் சோழநாடாகவும் இருக்கலாம். கரும்பிற்கு வேழம், கன்னல் எனும் பெயர்கள் இடைக் காலத்தவரால் வழங்கப்பட்டன. நிகண்டுகளும் குறித்துள்ளன. வேழமும் கரும்பும் புல்லினம் என்ற வகையில் ஓரினத் தவை. ஆனால், இரண்டும் வெவ்வேறானவை. 'கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும்'2 -என வேழத்தையும் கரும்பையும் வெவ்வேறாகவே சங்க இலக்கியங்களில் காணலாம், 1. புறம் : 892 : 19-21. 2 ஜங் 12:1; 亲89