பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

613


என்னும் சொல்லின் மூலப்பொருள் உள்துளையை உடையது என்பதாகின்றது. சாற்றைக் கொண்ட கரும்பு மென் கரும்பு’ என்றும் அவ் வகையில் வேறுபட்டுச் சாறில்லாத இது வேழக்கரும்பு என்றும் பாடப்பட்டன. இதனைப் பேய்க்கரும்பென்பர். இவ்வேழம் மூங்கில் அமைப்பில் குச்சியாக அமைந்ததால் அக்காலத்தில் வீட்டுக் கூரைக்கு வரிச்சுக் கம்பாகப் பயன் படுத்தினர். ' எனவே, வேழம் என்பது தனியொன்றைக் குறிக்கும் பாங்கில் கொறுக்கைச்சி - கொறுக்காந்தட்டை எனப்படும் நாணலைக் குறிப்பதாகும். ஐங்குறுநூற்றில் வேழப்பத்து' என்னும் தலைப்பில் பத்து பாடல்கள் உள்ளன. அவற்றால் பல கருத்துகளைப் பெற முடி கின்றது. வேழப்பத்து என்பது மருதத்திணையில் அமைந் துள்ளது. அப்பாடல்களில் கழனியில் பூக்கும் என்றும், நீர்க் கரைகளில் பூக்கும் என்றும், மருதத் துறையில் நீராடும் மகளிர்க்குத் துணையாகும் என்றும் வயலைக் கொடி (பசலைக் கொடி) இதனைச் சுற்றும் என்றும் பாடப்படும். இவைகொண்டு இது மருதநிலப் பூ என அறியலாம். மூங்கில் இனத்தால் புல்லினமாகிய வேழம் புதர்ப்பூவாம் நிலப் பூவாகும். "புதல்மிசை துடங்கும் வேழ வெண்பூ" என் பதாலும இதனை உணரலாம். “வளரா வாடை உணர்பு நளிை திண்டலின் வேழ வெண்பூ விரிவன : - என இதன் மலர்ச்சி வளராவாடையில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்பணிக்காலத் தில் மலரும். i - х 'கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும் (ஐங். 12) வேழம் கரும்பின் அலமருங் கழனி' (ஐங் : 1.8) - என்பன இப்பூ கரும்பின் பூவைப் போன்றது எனக் காட்டுகின்றன. கரும்பின் பூப்போன்றதாயினும் அதனைவிடச் சற்று அளவில் சிறியதாக, அதனைப்போன்றே மகாத்தாகப் பூக்கும். அக்கொத்து ஒர் ஒழுங்கான அமைப்புடையது, அதனால், "கொடிப் பூ வேழம் எனப்பட்டது. இங்கு கொடி 1 ப்ெரும்பான் : 263 3 தற் : 241 : 4, 5, ? இங் 17 1. - 4 ஐங் 17, 19.