பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/637

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
617

‘.... கொத்தாக உள்ளது என்றும் அறிவதோடு தனக்கென உரித் தாக ஒருவகை மனத்தை உடைய மலராகவும் கொள்ள நேர் கின்றது. எனவே 'தன்னுரிமை மண மலர்' எனலாம். இக்கொத்து சிறு சிறு பூக்கள் கதிராக அமைந்து சில கதிர்கள் கூடிய கொத்தாகும். இப்பூவின் நிறம் பற்றி இலக்கியத் தில் குறிப்பில்லை. என்றாலும் இதன் நிறம் பசிய வெண்மையாகக் காண்கின்றோம். குறிஞ்சிப்பாட்டில் தனிக்குறிப்புடன் இடம் பெற்றுள்ளமையால் அக்காலத்தில் சூடப்பட்டிருக்கும் எனக் கொள்ளலாம். பொதுவாக மூங்கில், பலவகையில் மக்கட்குப் பயன்படு வது சிறப்பாக இதன் கணுவில் தோன்றி முற்றும் ஒருவகை விதை வெண் ணில நிறங்கொண்டது, இது முத்துஎனப்படும். இதனால் முத்து விளையும் இடங்களில் மூங்கிலும் இடம்பெற்றது. இப்பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசிதோன்றும் இது மூங்கிலரிசிஎனப்படும். மலைநாட்டுக குறவர் இதனை உணவாகக் கொண்டனர். இவ்வரிசியை அடுத்து வரும் வேரலோடு காணவேண்டும். அரிசியையும் முத்ததையும் தரும் சிறப்புடைய இதற்கு ஒரு குறையையும் ஒரு நம்பிக்கை கரணியமாகக் கூறுவர். மூங்கில் கூட்டமாகப் பூத்தால் நாட்டில் வற் கடம், வறுமை ஏற்படும் என்றொரு நம்பிக்கை உண்டு. இந்நம்பிக்கை உந்துாழின் தன்னுரிமை மணத்தைக் கெடுக்கவில்லை. இதன் உரிமைபோன்று ஒர் உரிமையைக் கொண்டது, இதன் இனத்தைச் சேர்ந்த வேரல். 36. அரிசி தரும் மலர். வேரல், விரிமலர் ஆவிரை வேரில் தரல்' - எனக் குறிஞ்சிப் பாட்டு வரிசையில் வேரல் ஒரு பூவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதனைச் சிறு மூங்கிற் பூ என்றார் நச்சர். முன்கண்ட உந்துழைப் பெருமூங்கில் என்றே எழுதினார். வேரல், சிறு மூங்கில் என்பதை, 1 குறி பர் : 71.