பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618

முேழுநெறி அணங்கிய நுண்கோல் வேரல்' - என்று பெருங்கெளசிகனார் கூறும் "நுண்கோல் வேரல்’ என்பதாலும் அறியலாம். இவ்வடியால் இவ்வேரல், வழிமுழுதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களை உடைய சிறுமூங்கில்’ என நச்சரால் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இது பின்னிவளர்வதால் தோப்புகளுக்கு வேலியாக அமைக்கப்பட்டது. "வேரல் வேலி வேர்க்கோட் பலவின்' என்னும் குறுந் தொகை (18) போன்று நற்றிணையும் (232 :4) சூடாமணியும் (:யவதை:227) வேரல் வேலியாக அமைவதைப் பாடியுள்ளன.

  • வேரல் ஆவுடை அலங்கு சினை"2 - என நக்கீரர் இதன் பூவைக் குறித்துள்ளார். கபிலராலும் பாடப்பட்டுள்ளமையால் இதன் பூ உந்துாழின் பூ போன்று சூடவும் பயன்பட்டதை அறியலாம். -

வேரல், உந்துழைப் போன்றே குறிஞ்சி நிலத்தில் முன்பணிப் பருவத்தில், பசியவெண்மை நிறத்தில் கொத்தாகப் பூக்கும். பொதுவாக மூங்கிலில் அரிசி விளைவதைக் கண்டோம். அவற்றுள்ளும் வேரல்' என்னும் சிறு மூங்கிலின் அரிசி குறிக் கத்தக்கது. மிகுதியும் இவ்வரிசியே விரும்பிக் கொள்ளப்பட்டது இதனை மற்றொரு சான்றாலும் உறுதியாக்கலாம். மூங்கில் அரிசிக்கு இரண்டு பெயர்களும் உள்ளன. ஒன்று தோரை; மற்றொன்று வேரல். வேரல் என்னும் பெயரைப் பெற்றமை கொண்டே அதன் பூ தரும் அரிசி சிறப்புடையதாகின்றது. இப்பூ காயாகிக் கனியாகி உள்ளே அமைந்த வித்தே அரிசியாகின்றது. இவ்வகையில் இதனை 'அரிசி தரும் மலர்' எனலாம். மூங்கில்களில் அரிசி இதன் தனி உரிமை, ம்ேஃபேட். 1 bຮກ ັນ : 228, 2. திருக்குகு 19ர்.