பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/639

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
619

* : * * à * - i. 37. புல் அல்லா மலர். நரந்தம். மலைஞாலத்தில் குமிழிப் பகுதியிலிருந்து எங்கும் 'நாரங்க வெள்ளம் கிடைக்கும். நாரத்தம் பழச்சாறு கலந்த குடி நீர்தான் நாரங்க வெள்ளம் எனப்படுவது. நாரத்தைக்கு 'நாரங்கம்' என்பது மலைஞாலத்தார்வழக்கு. பிங்கலமும்சூடாமணி நிகண்டும் இச்சொல்லைக் குறித்துள்ளன. நாரத்தையின் இலக்கியச் சொல் நரந்தம் - நரந்தை நரந்தையின் மரூஉ.மொழி களே நாரத்தையும் நாரங்கமும். இலக்கியங்களில் நரந்தம்’ என்பதற்கு நரந்தம் பூ" என்றும் நாரத்தம் பூ என்றும் பொருள் விரிக்கப்பட்டது. கலியில் நச்சர் 'தரந்தம் யூ” என்றார். குறிஞ்சிப்பாட்டில் "நாரத்தம் பூ" என்றார். சிலம்பில் அடியார்க்கு நல்லார் நரந்தைப் பூ என்றார்; அருஞ்சொல்லுரைகாரள் நாரத்து என்றார். எனவே, நரநதம்’ என்பது நாரத்தையாகின்றது. அதிலும் மலைநாரத்தையைக் குறிக்கும். மலைநாட்டு நாரங்க வெள்ள வழக்கும் இதனைச் சொல்கின்றது. நரந்தம் என்னும் பெயரில் ஒரு வகைப் புல் உண்டு. அது நறுமணம் உள்ளது. நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி' ! - என்றபடி மனமுள்ள அப்புல்லைக் கவரிமான் விரும்பித் தின்னும். அதன் மனத்திலும் சுவையிலும் மனம் வைத்த மான் கனவிலும் அப்புல்லைக் கனடு மகிழுமாம இப்புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் பணி நீரை மலர் மாலைகளில் தெளித்து மணமேற்றுவர். இப் புல்லும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது. இடத்திற்கேற்ப உரை யாசிரியர்கள் இப்புல்லைக குறித்துக் காட்டியுள்ளனர். குறிப்பிடத்தக்க மலர்களைத்தரும் மரங்களோடு இந் நரந்த மரமும் சேர்க்கப்பட்டு "தாத்தமும நாகமும் விரிமலர் பரப்பி' " - என்பது போன்று இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள சோலை களில் இம்மல. ர்விளங்குவதை காவே, 1. புறம் : 182 : க், 8 மணி : : 182 2 பதிற் : :1; 22-22