பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28


இயற்கை அமைப்பும் இயற்கை நிகழ்ச்சியுமாகவே கொள்ளப் பட்டது. இதுபோன்ற ஒரு வாழ்வியல் இலக்கண அமைப்பு உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை. - மாந்தனது வாழ்வு, மலையிற்பிறந்து அருவியொடு காட்டில் குதித்தது. அருவி ஆறாக, ஆறே வழியாக வயலைச் செய்தது. ஆற்றொழுக்கோடு ஒடிக் கடலில் மிதந்தது. இவ்வாறு மலை, காடு, வயல், கடல் என வேறுபாடுடைய நான்கு நிலமே உலகம் எனக் கண்டு உலகை நான்கு-நிலம்-நானிலம் என்றனர் தமிழர். மலையும் காடும், உருண்டும் சரிந்தும், எரிந்தும் அணைந்தும் வெப்ப மணற்பாங்கான செயற்கை நிலத்தையும் சேர்த்து ஐந்து நிலமாக வகுத்தனர். இங்கெல்லாம் நிகழும் ஒழுக்கங்களைக் கூட்டி 'ஐந்திணை' என்றனர். காதல் பூ இவ்வைந்து நிலங்களுக்கும் பெயர் சூட்டிய பாங்கில்தான் தமிழர் தம் இயற்கை உணர்வு மலர்கின்றது; நுண்ணறிவு மணக்கின்றது. . மலையைப் பார்த்தனர். கல்லும் கரடும் கண்களிற் பட்டன. முள்ளும் முரடும் உறுத்தின. அகிலும் தேக்கும் அழைத்தன. முகிலும் தென்றலும் தழுவின. மயிலும் கிளியும் மயக்கின. களிறும் கரடியும் கலக்கின. இவையாவும் உள்ளத்தில் பட்டன; தொட்டன. செந்நிறத்தின் கடலாகச் சிரித்து விாந்த மலர்ப்பரப்புதான் உள்ளத்தில் ஊன்றிப் பதிந்தது. அம்மலர் கோடிக்கணக்கில் குலுங்கியது. ஐந்து வண்ணங்களில் பல்லாண்டு இடைவெளியில் பூத்தது. அதுதான் குறிஞ்சி மலர். இக்குறிஞ்சிப் பூ, மலையின் தனித்தன்மைப் பூவாக விளங்குவதைக் கண்டு இதனைய்ே குறியீடாகக் கொண்டு மலை நிலத்திற்குக் குறிஞ்சி' எனப் பெயர் சூட்டினர். ...' ・ × காட்டைக் கண்டனர். தேட்டமாம் மரச்செறிவு தெரிந்தது சாமையும், முதிரையும் சுவை ஊட்டின. மானும் முயலும் மருள்வித்தன. ஆனால், மூக்கின் வழி முழு உள்ளத்தையும் கவர்ந்தது. முல்லைப். பூ. அப்பூவையே. குறியீடாகக் கொண்டு அப்பூவின் பெயரையே காட்டு நிலத்திற்குச் சூட்டி முல்லை: என்றனர். - : “. . . ~~ *.*.