பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/644

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
624


முன்னே வந்த வழை என்பதற்குச் 'சுரபுன்னை" என்று எழுதினார். வழைதான் சுரபுன்னை. இவ்வகையில் நச்சர் எழுதி யது பொருத்தமானது. ஆனால், நாகம் சுரபுன்னை அன்று. பரிபாடலும், . - "நல்லினர் நாகம் நறவம் சுரபுன்னை' - என நாகமும் சுரபுன்னையும் வெவ்வேறானவை எனக் காட்டியுள்ளது, இதுபோன்று கம்பரும் ஒன்று செய்துள்ளார். நெய்தல் நிலத்து மகளிராம் நுளைச்சியர் தலையில் புன்னை மலர் சூடியிருப்பதை, "நாகமும் நாறின துளைச்சியர் ஐம்பால்2 -எனப் புன்னை யை நாகமாகப் பாடினார். புன்னையைப் புன்னாகம் என நிகண்டு கள் எழுதியிருப்பதும், புன்னாகம் என்பதை நாகமாகச் சிலர் கொண்டதுமே கம்பரை இவ்வாறு பிறழ எழுத வைத்தது. நிகண்டுகள் இதற்குக் காட்டும் பிறபெயர்களும் குழப்பமானவை, எனவே, அவற்றை விடுக்கலாம். இவற்றைக் கூர்ந்து நோக்கினால், நாகம் என்பது தனியொரு பெயர்கொண்ட மரம். குரங்குகள் தாவிக் குதித்து விளையாடும், "... ... ... ...உயர்பெருஞ் சினை யை உடைய பெருமரம். மலையின் 'மீமிசை நாக தறு மலர்' எனப்படுவதுடன் பல இடங்களில் குறிஞ்சி நிலத் தொடர்பிலேயே குறிக்கப்படும். எனவே இது குறிஞ்சி நிலத்தது. இம்மரம் மலர் அடைமொழியுடன், "மலர் நாகத்து' (பொருந்:209) என்றும், "நறும்போது களுலிய நாகுமுதிர் நாகத் து' (சிறுபாண் :108) என்றும் குறிக்கப்படுவதுகொண்டு இம்மரம் குறிக்கத் தக்க மலராகின்றது. “நல்லினர் நாகம்' என்னும் பரி பாடலின்படி இது கொத்தாகப் பூக்கும். "நறும்போது” "நறுமலர்", "நறு வி” என்றெல்லாம் இம்மலர் நறுமண அடை மொழியுடன் குறிக்கப்படும். 1 பரி. 12 : 80 3 பெருங் : இலா : 15:5, 5 கம்பு காt : 48 4 திருமுகுகு : 301, 802.