பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/645

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
625

மலர்களின் நிறங்களைத் தக்கவாறு குறிக்கும் திருத்தக்க

Աք மலா நாகம் என்றுள்ளமை, இம்மலர் நீல மணிபோலும் நீல நிறங்கொண்டதைக் காட்டுகின்றது. - "ஆசினி முதுகளை கலாவ மீமிசை (மலைமேலிருந்து) நாக நறுமலர் உதிர '2 -என நக்கீரர் ஆசினிப் பலாச் சுளைக் காலத்தில் நாக மலர் உதிர்வதைக் குறித்துள்ளார். எனவே, அப்பலா பழுக்கும் வேனிற் கால்ம் இதன் பருவமாகும். கடும்புனலில் அகப்பட்ட ஒருத்தியைக் காப்பாற்றப் பாய்ந்த ஒரு தலைவன் நிள் நாக நறும் தண் தார்'8 மார்பில் அணிந்திருத்ததைக் காண்கின்றோம். இம்மலர் மாலையாகியதை யும், நீள்மாலையாக மனத்துடன் குளிர்ந்து விளங்கியதையும் கொண்டு இதனைச் சூடும் மலர் எனலாம். இவ்வாறு குறிஞ்சி நிலத்துக் கோட்டு மலராக், வேனிற் பருவத்தில், நீல நிறக்கொத்தாக, நறுமணத்துடன் மலரும் தன்மைகொண்டது இம்மலர், நாகு என்னும் தமிழ்ச்சொல்லடியாகப் பிறந்த நாகம் வட சொல்லான பாம்பைக் குறிக்கும் நாகத்துடன் பொருத்தப்பட்டு 'ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம் (பாம்பு) போன்ற மரம் எனப்பட்டதால், இம்மலரைப் பாம்புப்பெயர் மலர்' எனலாம். இந்நாகப் பெயர்கொண்ட புன்னாகமும், இதனுடன் பிறழ உணரப்பட்ட வழையும் தொடர்ந்து காணத்தக்கவை. 40. மாந்தைச் சோலை மலர். புன்னாகம், நாக வகையைச் சேர்ந்தது புன்னாகம். புன்மை என்னும் அடைமொழி, நாகமரத்தினும் இம்மரம் புல்லியது என்பதைக் கூறு 1 சீவ. சி. 1589 , 8 கலி 39 :3. 2 திருமுருது : 301, 802 4. புரி , 12 : 4 崇40