பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



41. அண்டிரன் முடி மலர்.

வழை. 'வரையன புன்னாகம் - கரையன சுரபுன்னை' ! - எனப் புன்னாகத்தை அடுத்துச் சுரபுன்னை அமைக்கப்பட்டுள்ளது. வண்ணனைப் போக்கில் அமைந்த இவ்வமைப்பு மட்டும் இவ்விரண்டையும் இணைத்துக்காட்டவில்லை. புன்னாகத்தைப் புன்னை இனமாகக் கண்டோம். சுரபுன்னை' என்னும் இதன் பெயரே இஃதும்புன்னை இனம் என்று கூறுகின்றது. சுரம்’ என்னும் அடைமொழி, இது நெய்தல் நிலத் துப் புன்னை அன்று; சுரத்துப்புன்னை” எனவேறு படுத்துகின்றது. இங்கு சுரம் என்றது காடு. மலைசார்ந்த காடு. கரையன என்றது இங்கு மலையடிவாரத்து வையையாற்றுக் கரை, 'சுரபுன்னை' என்பது வழையைக் குறிக்கும் என்பதை முன்னரும் கண்டோம். நச்சரும் புறநானூற்றுப் பழைய உ7ை காரரும் பிறரும் வழை" என்பதற்குச் சுரபுன்னை' என்றேபொருள் எழுதியுள்ளனர். நிகண்டுகளும் வழை சுரபுன்னை" என்னும் ஒரு தொடராலேயே குறித்துள்ளன. இலக்கிய ஆட்சியிலும் வழை என்பதே அதிக வழக்கு. r - நாக மரத்தைப் போன்றே வழையும் மலை மரம். * சிலந்யின் வழை" 'வழையமை சிலம்பு", "வழையமல் அடுக்கம்', 'வழையமல் சாரல்' என்றெல்லாம் மலைப்பகுதிச் சார்பிலேயே வழை பாடப் பட்டுள்ளது. - திருத்தக்க தேவர் இம்மரத்தை அதன் காய்கொண்டு அடை யாளங் கூறுகின்றார். 'குடம் புரை காய் வழை என்று இதன் காய் குடம் போன்றது என்று கூறியுள்ளார். 'குறிஞ்சிப் பட்டு இதன் மலரைக் கொங்கு முதிர் நறு வழை" என்று காட்ட அதற்கு நச்சினார்க்கினியர் 'தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப் பூ” என்று பொருள் எழுதி இம்மலரின் நறுமணத்தைக் குறித்தார். இவ்விடத்துடன் இம்மலர் பற்றிப் புறத்தில் முடமோசியாரால் குறிக்கப்பட்டுள்ள ஒன்றையும் காண் கின்றோம். - 1. பரி : 1.1 18, 17 8 குறி. பா : $8, 2 சீவு, சி 1918