பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

629


இது மலைநாட்டு மரமாகக் குளவியொடு குறிஞ்சிநிலத் தொடர்புடன் இலக்கியங்களில் அமைந்துள்ளது. கார்காலத்தில் பூப்பது. சிறிய சிறிய மலர்களாகக் கொத்துப் பூவாக மலரும். மஞ்சள் நிறங்கொண்டது. நிறத்தாலும் அமைப்பாலும் எடுப்பான மலர் அன்று. வில்வம் என்னும் இலையே சைவ மதத்தாரால் முழுதும் சிவ வழிபாட்டிற்குக் கொள்ளப்படும். தேவார மூவரும் சைவச் சான்றோரும் இதனை 'வில்வம்' என்றும் கூவிளம்’ என்றும் பாடியுள்ளனர். முழுதும் இதன் இலையே குறிக்கப்படு வதால் கண் ணியாக இவ்விலையும் சூடப்பட்டிருக்கலாம். வள்ளல்களுள் ஒருவனான எழினி என்பான் குதிரை மலைக்குத் தலைவன். அவன் தன் அடையாளப் பூவாக இதனைச் சூடினான், இதனை, 'ஊரா தேந்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினி' - எனப் பெருஞ்சித்திரனார் பாடினார். 'நாறு கூவிள நாகுவெண் மதியத்தொடு ஆறு சூடும் அமரர் பிரான்”2 -எனச் சுந்தரர் சிவன் சூடும் மலராகப் பாடினார். பிறரும் பாடியுள்ளனர். எனவே, இது சூடும் பூவும் சூட்டும் பூவுமாகும். 43. வாள் வீர மலர். கூவிரம். குறிஞ்சிப் பாட்டில், எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம் -எனக் கூவிரம்' என்றொரு பூ வந்துள்ளது. இதற்குக் கூவிரப் பூ” என்று நச்சர் பொருள் எழுதியுள்ளார். கூவிளம் போன்று கூ' என்னும் அடைமாழி பெற்றது இது. இலக்கியப் பாடல்களில் வேறெங்கும் இப்பெயர் இல்லை. 'வீரை என்றொரு பூ உண்டு. அஃதொரு பாலை நிலத்து மரப் பூ அதன் இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் காய் வாள் போன்று பட்டையாக நீண்டது. அதனால் அது "வாள்வீரம்’ எனப்பட்டது. அவரை வகையில் ஒரு கொடி வாள் போன்று 1 புறம் : 188 : 8,9, 3 குறி, பா : 66, 2 சந் தே சாய் 18.