பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/651

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
631

åši செவ்வலரி என்றே எழுதினார். கணவிரத்தையே 'கனவீரம்: என்றனர். நிகண்டுகள் காட்டும் கரவீரம் முதலியவை வடசொற் கள். பரஞ்சோதியார் "செழுங்கரவீரம்” என்று கையாண்டார். செவ்வலரி என்பதே இதன் நிறத்தைக் கூறுகின்றது. பாலைநில வழியில் கொள்ளையடிப்பவர் வழிச் செல்வோரைத் தம் கணையால் அடித்து வீழ்த்துவர். வீழ்ந்தவர் குருதி கொப் பளிப்பக் கிடந்ததை மாமூலனார், 'கண விர மாவை இடு உக் கழிந்தன்ன புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்" - என்றார். கனவிரப் பூமாலை புண்ணுமிழ் குருதி போன்றது. மணிமேகலை யில் சுதமதி என்பாளது தந்தையைப் புனிற்று ஆ ஒன்று முட்டிக் குடரைச் சரித்தது. குருதி கொட்டும் குடரைக் கையில் ஏந்தி நின்றவனைச் சாத்தனார், 'கனவிர மாலை கைக்கொண் டன் ன தினம் நீடு பெருங்குடர் கையகத் தேந்தி"2 - என்றார். இவ்வாறு குருதி தோய்ந்த குடருக்கு உவமையாகியது. இதனை 'நினைக்குடர் மலர்' எனலாம். இம்மலர் ஓரளவில் மணமுடையதாயினும் துய நன்மணம் ஆகாது. அலரி என்னுஞ்சொல் அரளி எனத் திரித்து வழங்கப் படும். இவ்வரளிக்குப் பீநாறி” என்றொரு நாட்டு வழக்கு உண்டு. எனவே, இதனை ஒப்பனை கருதி விரும்பிச் சூட வில்லை. ஆயினும் "கண விர மாலை இடு உக் கழிந்தன்ன’’ என்பது இப் பூமாலை அணியப் பட்டுக் கழித்து இடப்பட்ட மை குறிக்கப்படுகின்றது. கல்லாடனார், 'போதவிழ் அவரி நாரில் தொடுத்துத் த பங்கிரும் பித்தை பொலியச் சூடி" என நாரில் கட்டிக் குஞ்சியில் அழகோடு விளங்கச் சூடியதாகப் பாடியுள்ளார். இங்குள்ள சூழலையும் பிறவற்றையும் நோக்கும்போது மிக எளியவர் ஆங்காங்கு கிடைக்கும் மலரைச் சூடிய வகையாகக் கொள்ள வேண்டியுள்ளது. குறிஞ்சிப் பாட்டில் இப்பூ இப்பெயரில் இடம்பெறவில்லை. சிவபெருமானுக்குரிய மலர்களில் இஃதும் ஒன்றாகி எண் மாமலர்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. சிவன், பித்தன் எனப் 1 அகம் :31 . 9, 10, 3 புறம் : 37.1 . 3, 4. 2 மணி : 5 : 48, 49