பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/652

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632


படுவதால் பித்தர் இம்மலரால் ஆகிய மாலையைச் சூடியதை மணிமேகலை, கன விர மாலையில் கட்டிய திரள் புயன்" - என்றது. முருகனுக்கு அமைக்கும் களவழிபாட்டில், 'பெருந்தண் கணவிர நறுந்தண் மாலை”யை2 - ஒத்த அன வில் அறுத்துக் கள ஒப்பனையாகத் தொங்க விடப்பட்டிருந்ததை நக்கீரர் பாடியுள்ளார். இம்மலர் பாலை தினைத் தொடர்பில் பாடப் படுவதால் இது பாலைநில மலர் ஆண்டு முழுவதும் பூக்குமாயினும் வேனிற்பருவம் இதற்குரியது. இம்மலரால் பக்குவமாக்கப்படும் மருந்து பல நோய்களைத் தீர்க்கும் என அகத்தியர் குணபாடம் கூறுகின்றது. ஆயினும், இதில் தோன்றும் மஞ்சள் நிறச் சாறு கொடிய நஞ்சாகும். இக்காலத்தில் உரோசா மலர்த் தோற்றத்திற்காக இம்மலரைக் கலப்படமாக மாலையாக்கி விற்கின்றனர். வழிபாட் டிற்கும் மருந்திற்கும் பயன்படுகின்றது. நஞ்சானாலும் நோய் தீர்க்கும் தகுதி பெற்றது. 45. வரகுப் பொரி மலர், தெறுழ் வி. சங்க இலக்கியங்களில் மட்டும் வரும் மலர்களில் தெறுழ் வி’ ஒன்று. கபிலர் புறநானூற்றில், 'கார்பெயல் தலைஇய காண்பின் காலைக் களிற் றுமுக வரியில் தெறுழ்வி பூப்ப - என இப்பூவை விளக்கியுள்ளார். இதுகொண்டு கார்காலத் தொடக்கத்தில் இது பூக்கும். கண்ணுக்கினிய காலைப் போதில் பூக்கும். களிற்றின் நெற்றியில் தோன்றும் புள்ளிகளைப்போன்ற வடிவத்தில் பூக்கும். அப்புள்ளியின் மஞ்சள் நிறத்தில் பூக்கும்’ என்றெல்லாம் அறிய முடிகின்றது. இவ்வடிகட்கு உரை எழுதிய பழைய உரைகாரர், 'தெறுழ் என்பது காட்டகத்தொரு கொடி, புளிமா என்றுரைப்பாரும் உளர்” என்றார். இது கொடி வகைதான் என்பதை மருதன் இளநாகனார் பாடலால் கொள்ள முடிகின்றது. அவர், 1 மணி மலர்வனம் : 194 3 புறம் 119 : 1, 2. 2 திருமுருகு 288, 237