பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634


செம்மை நிறங்கொண்டது என்றாகும். நச்சர் 'நெருப்பையொத்த எறுழம் பூ" என்றே பொருள் தந்தார். ஒன்று இங்கே கருத வேண்டியுள்ளது. இதனைப் பாடிய கபிலர் முன் கண்ட "தெறுழ் வீ யைப் புறத்தில் வண்ணித்தும் உள்ளார். ஆனால் அவர் தமது குறிஞ்சி மேடையில் இப்பூவை வைத்தாரல்லர். மற்றையோரால் தெளிவாகவோ குறிப்பாகவோ பேசப்படா எறுழத்தைக் கூறித் தம்மாலேயே பிறிதோரிடத்தில் வண்ணிக்கப்பட்டுள்ள தெறுழ் வீயை வைக்காது விடுவாரோ என்னும் வினா எழுதல் இயல்பு. இவ் வினாவால் குறிஞ்சிப்பாட்டி லும் தெறுழம் எனப்பட்டதுதான் பின்னர் ‘எறுழம்' ஆக மாறிற்றோ என்னும் ஐயம் எழலாம். ஆனால் எரிபுரை' என்னும் நெருப்பு நிற அடைமொழி தெறுழ்வீக்குப் பொருந்தவில்லை. எனவே, இதனைத் தனியொரு பூவாகக்கொண்டு குறிஞ்சி நிலப் பூவாக, கார்காலத்ததாக, இணராக, செம்மை நிறத்ததாக, கோட்டுப் பூவாகக் கொள்ளவேண்டியுள்ளது. 47. கோழிக் கால் முள் மலர். சண்பகம். நக்கீரர், கபிலர், நல்லந்துவனார் என்போர் சங்கப் บุรpราชi Eรกิร) நன்கு அறிமுகமான புலமைப் பெருமக்கள். மூவரும் ஒத்துப் பேசி முடிவெடுத்தது போன்று சண்பகப் பூவை ஒரு தொடரால் அறிமுகப்படுத்தியுள்ளனர். 'பெருந்தண் சண்பகம்’ என்பது அத்தொடர். இத்தொட ரால் சண்பகப் பூ பெருமைக்குரியது - சற்றுப் பெரியது. குளிர்ச்சி யானது என அறிமுகமாகின்றது. மற்றையோரும், பெருஞ் சண்பகம்," "சண்பக நிரை தண் பதம், மனங்கமழ் சண்பகம்" 'நாறு இணர்ச் சினைய சண்பகம்’ உயர் சண்பகம்' - என் றெல்லாம் சிறப்பாகப் பாடியுள்ளனர். நிகண்டுகள் ஒருமுகமாக இதற்குக் சம்பகம்’ என்ற மறுபெயரைக் குறித்தாலும் சண்பகம்’ என்பதே இலக்கிய வழக்கு. சில சிறு நூல்களன்றிச் சங்கம் முதல் காப்பியம் முதலியவற்றி லெல்லாம் 'சண்பகம்’ என்றே உள்ளது. ஒர் உவமை இப்பூவின் வடிவமைப்பையும் நிறத்தையும் அறிமுகப்படுத்துகின்றது. -