பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/657

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
637


“மாதரசர் மயில் அன்னவர் சண்பகச் சாம்பல் (வீழ்ந்து வாடிய பூ) ஒத்தார்' என்றார். பெருந்தன் சண்பகத்தின் வாடலும் இலக்கியம் பெற்றது. 48. வைர வாள் மலர், நந்திவட்டம். 'நந்தி’ என்னும் சுருக்கப் பெயர்பெற்ற இதனை இலக்கியம் நந்திவட்டம்’ என்னும். சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் நந்தி 2 எனப்படும். இதனை நச்சர் "நந்தியாவட்டப் பூ' என்றார். நிகண்டுகள் நந்தியா வர்த்தம்' என வட்டத்தை வடசொல் வர்த்தமாக்கின. அவை ஒருமுகமாக 'வலம்புரி நந்தியாவர்த்தமாகும்’3 என 'வலம்புரி எனும் ஒரு மாற்றுப்பெயரைக் காட்டுகின்றன. இம்மலரில் ஒற்றை அடுக்கு, இரட்டை அடுக்கு என இருவகை உள. ஒற்றை அடுக்கை அடுக்கு நந்தியாவட்டை' என்பர். இதன் இதழ்கள் ஒன்றிற்கொன்று குறையாமல்நந்தாமல் ஒரே வளர்ச்சியில்வலப்புற வட்டமாக அமைந்தமையால் 'நந்தியாவட்டம், வலம்புரி என்றும் பெயர்களைப் பெற்றது. இஃதொரு செடி. பால் பிடிப்புள்ளது. இதன் பூ தணிப் பூ. நல்ல வெண்மை நிறங்கொண்டது. கோட்டுப் பூவாகிய இது காட்டுப் பூ. எனவே, முல்லைநிலப் பூ. வேனிவில் பூக்கத் தொடங்குமாயினும் பல பருவங்களிலும் தொடர்ந்து பூக்கும். இம்மலர் தண்மையும் மணமுங் கொண்டது. கண்ணில் ஒற்றிக்கொள்வதால் குளிர்ச்சியேறும். இதன் மணத்தால் கண் நோய் நுண்ணுயிரிகள் அழியும். இதன் மணத்திற்கு மருந்துத் தன்மை உண்டு. பாம்பின் நஞ்சிலும் சாதி வகுத்தோர், 'நந்தியா வட்டம் தாறும் நகைமுடி அரசனாயின்’4 -என அரச சாதி நஞ்சிற்கு இதன் மனத்தைக் காட்டினர். வழிபாட்டுத் துறையில் இது எண்மா மலர்களில் ஒன்று

  • ----------

2951 : பிங், தி 3 4 : 2349 می . بنت یا 1 2 குறி. பா 19: 4. சீவ. சி. 1287