பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/658

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
638


'நந்தி வட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பன்" என அப்பர் சிவன் சூடுவதைப் பாடினார். பாரகக் கதைத் தலைவனாகிய துரியோதனன் இம்மலர் மாலைக்குரியவன். அதனால் அவனுக்கு 'நந்தியாவர்த்தத் தாமன்" என்றொரு பெயரைச் சூடாமணி நிகண்டு காட்டி புள்ளது. இம்மலரின் மருத்துவப் பயனைக் கூறும் தேரன் வெண்பாவும் இம்மலரைச் சுயோதனன் மாலை' என்றது, இம்மலர் கண் நோய் பலவற்றையும் தீர்க்கும் மருந்து மலராகும். அகத்தியர் குணபாடம், கண்ணிற் புண், படலம், கரும்பாவை ஆகிய நோய்களைத் திர்ப்பதுடன், 'தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும் நந்தியா வட்டப்பூ நன்று"- என்றது. இதுபோன்றே இம்மலர் கண்ணின் கடுநோய்களைப் போக்குவதைக் கூறும் தேரன் வெண்பா இம்மலர் மருத்துவர் (வாகடர்) கையில் இருப் பது வைரவாள் கையிலிருப்பது போன்றது என, (கண் நோய்களை) 'மாள நொருக்குதலால் வாகடர்கைக் கேற்றவச்ர வாளாகும் சுயோதனன்மா லை' என்றது. கண் நோய்கள் மாளுமாறு நொருக்கும் வைர வாளாம் இம்மலர், மருத்துவ வகையில் இது வைர வாள் மலர்' 49. அரக்கு வரி மலர். நற!. நறா என்பது கொடி. இதன் பூவைப் போன்று கொடிக்கும் இரு தகுதி இடம் உண்டு. பூவைச் சூடுவது போன்று கொடியை யும் இலையுடன் கிள்ளிச் சூடிக்கொள்வர். அதற்கு இக்கொடி கொண்டுள்ள மெல்லிய மனமும் கரணியம். 'நந்தி நறவம் நறும் புன்னாகம்' ே -எனும் குறிஞ்சிப்பாட்டில் வரும் "நறவம்' என்னும் நறாவிற்கு உரை எழுதிய நச்சர், 1 அப். தே ஐயாறு 8 குழி, பா , 91 1 சூடா தி : மக்கள் 15 : 1.