பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/659

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
639


'நறவம் - நறைக்கொடி' என்றே பொருள் எழுதினார். 'நறா என்பதே இதன் மூலப்பெயர். பிடா, தளா போன்று இஃதும் சொல் வளர்ச்சி பெற்றது. நறா - நறவு - நறவம் என்னும் பெயர்களில் வழங்கப்பெறும். கொடியைச் சேர்த்துக் கூறும்போது நறைக்கொடி எனப்படும். இச்சொற்கள் நான்கும் சங்க இலக்கிய ஆட்சிகொண்டவை. நறை தவிர்த்துப் பிற மூன்று சொற்களுக்குத் தேன்’ என்னும் பொருளும் உண்டு. இரண்டின் வேறுபாடு காட்டும் பாங்கில், 'சூடு நறவமொடு தாமம் முகிழ்விரியச் தடா நறவமொடு காமம் விரும்ப' ! -எனச் சூடும் நறவமாக மலரும், குடா நறவமாகத் தேறலும் குறிக்கப்பட்டன. படரும் கொடியில் இம்மலர் கொத்தாகப் பூக்கும். நப்பண்ணனார், ஊழ் இணர் நறவம்' என இண 仄TE击 குறித்தார். மகளிரது செவ்வரி படர்ந்த கண்ணிற்குச் செங்கழுநீர்ப் பூவிதழை உவமை கூறுவதுபோன்று நறவம் பூவின் இதழையும் கூறுவர். குவளை வடிவக் கண்ணில் செவ்வரி படர்வதை,

  1. $

.. ... நறளின் சேயிதழ் அனைய வாகிக் குவளை மாயிதழ் புரையும் மலிர்கொள் ஈரிமை' ே -என்றனர் இளங்கீரனார். இங்கு நறவின் இதழ் சேயிதழ்" எனச் செம்மையாகக் குறிக்கப்பட்டமை கண்ணின் செவ்வரியைக் குறிக்கவேயாகும். இதன் இதழ் ஒவ்வொன்றும் வெளிர் செம்மைகொண்டது. இதழின் புறம் வளைந்தது. வளைந்த அம்முதுகில் ஒரு சிவப்புக் கோடு - வரி உண்டு. இதனைப் பேரிசாத்தனார் என்பார் சங்கின் முதுகில் அரக்கால் வரி தீட்டியதை உவமையாக்கி. 'அவ்வளை வெரி நின் (முதுகில்) அரக்கு ஈர்த்தன்ன செவ்வரி இதழ் சேண்தாறு நறவின்' 4 என்றார். இவ்வாறு செம்மையும் மென்மையும் கொண்ட இதழ் சிறு குழந்தையின் கை விரல்போன்று விளங்கும். இதனையும் கலித்தொகை, 1 பரி, திரட்டு 1 55, 56, 3 அகம் 19 : 9-11, 2 பரி : 1.3 ; 78. 4 நற் 25 :1, 2,