பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/662

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
642


பூங்கொத்து கொடியிலிருந்து கீழே மணற்குழி நீரில் விழுந்து கிடக்கும் காட்சி இடியப்பம் பாலில் வீழ்ந்து கிடப்பது போன்றுளது. -என்றார். அப்பாடல்: 'குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடி பாசிலைக் குருசின் புன்புற வரிப்பூ காரகல் கூவியர் பாகொடு பிடித்த இழைசூழ் வட்டம் - (நூல் இழைபோன்று வட்டமாகச் சூழ்ந்துகிடக்கும் அப்பம்) பால் கலந் தண வபோல் நிழல் தவழ் வார்மணல் நீர்முகத் துறைப்ப") இவ்வாறு நூல் இழை வட்டமாக உவமை கூறப்படுவ தற்கு ஏற்ப இப் பூ ஓர் ஒழுங்காகக் கோதை போன்று பூக்கும். சிலப்பதிகாரத்தில் இது மாதவி' என்னும் மாற்றுப்பெயர் பெற்றது. அக்காப்பியத் தலைவி மாதவியின் பெயருக்குத் துணை நின்றது. அங்கெல்லாம் இளங்கோவடிகளார் கோதை மாதவி' என்றே பாடினார். அதற்கு அடியார்க்கு நல்லார் "மாலைபோலப் பூக்கும் குருக்கத்தி' என்று உரை எழுதியதும் நோக்கத்தக்கது. காஞ்சி மரம் மருத நிலத்தது. அதனைச் சுற்றிப் படரும் கொடி இது. இம்மலர் மணமுள்ள சூடும் பூவாதலால் விற்பனைக்கு வரும். இதனைப் பித்திகையுடன் விற்று வருபவள், "தண்டலை உழவர் தனிமட மகள்' எனப்பட்டாள். மருத நிலத்து உழவர் குலப்பெண்ணால் விற்கப்படுவதாலும் இம் மலர் மருத நில மலர். இளவேனிற் பருவத்தில் மாலையிற் பூக்கும். பூக்கும் பருவத்தலே இதற்கு வாசந்தி (வசந்தத்தில் மலர்வது) என்றொரு வடசொற் பெயரும் அமைந்தது. திருத்தக்கதேவர் கத்திகை’ என்னும் சொல்லை அமைத் துள்ளார். அதுகொண்டு முருகன் சூடியதாக அதன் உரை காரரும் விரித்துள்ளார். பெரியாழ்வாரும். "குடந்தைக் கிடத்த எங்கோவே! குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்"- எனக் கண்ணனுக் காகப் பாடினார். பிறரும், முல்லை, கத்திகைப் ... .... معه ممه . . . " போது வேய்ந்து'க் -விளங்கியதாகவும் பாடியுள்ளனர். 1 பெரும்பாண் : 375 - 879, 8 நற் 97 :9 3. சிலம்பு : 14. 118, 4. சீவ; சி 1 1208