பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

643


எனவே மணமும் வெண்மை எழிலும்கொண்ட இம்மலர் يج مي சூடும் பூ- - 51. பவளக்கால் மலர். சேடல், சேட்ல் செம்மல் சிறுசெங்குரலி' - -எனக் குறிஞ்சிப்பாட்டில் பாடப்பட்டது சேடல். சங்க இலக்கியங்களில் இவ்வொரு இடத்தில் மட்டும் இடங்கொண்ட பூ இது இப்பெயர் இடைக் காலப் பிற்கால இலக்கியங்களில் எதிலும் இடம்பெறவில்லை. இதற்கு நச்சினார்க்கினியர், - சேடல் - பவளமல்லிகை’ என்று எழுதினார். இப்பவள மல்லிகை பிற்காலச் சிற்றிலக்கியங்களில் பேசப்படும். இதுதான் 'பாரிசாதம்' என்பர். உ. வே. சா. அவர்களும், 'இது பவளமல்லிகை எனவும் பாரிசாதம் என வும் வழங்கும் - என அடிக்குறிப்பெழுதினார்கள். பாரிசாதம் புராணங்களில் தேவருலகத்திலிருந்து கொணரப்பட்டதாகக் கதைக்கப்படும். நிகண்டுகள் சேடல் பற்றியோ, பவளமல்லிகை பற்றியோ எக்குறிப்பும் வைக்கவில்லை. நச்சர் எழுதிய ஒன்றுகொண்டே சேடலைப் பவளமல்லிகையாகக் கொள்ள வேண்டும். மல்லிகை என்னும் சொல்லுக்கேற்ப இது முல்லைக் குடும்பத்தைச் சேர்ந்ததே. ஆயினும் முல்லைத் தன்மையோ வடி வமைப்போ கொடியினமோ அன்று. புட்பவிதி, "... ... ... பவள மல்லிகை சண்பகம் ஞாழல் கோட்டுப்பூ வகையே 3 -என்றதன் படி பெருஞ்செடியாகிய குறுமரத்தில் பூப்பது. முல்லை நிலத்துரிமை யுடையதாகக் கார் காலத்தில் முன்னிரவில் பூத்து மணம் கமழும். இதன் அடிக்காம்பு உள்துளை உடையது. காம்பாம் கால் மட்டும் பவளம் போன்று சிவந்த நிறங்கொண்டது. இதனாலேயே 1 குறி; யா 82;. 3 புட் வி ; 2 : 4, 2 குறி பா : 82 அடிக்குறிப்பு. - -