பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

645


சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் ஒமை மரம் குறிக்கப்படும் அனைத்துப் பாடல்களிலும் மரத்தின் பட்டை, புல்லிய இலை உலரிய தலை, காய்ந்த கிளை, நிழல் தருதல் என்பனவற்றையே காணமுடியும். ஒரிடத்திலேனும் பூவைப்பற்றிய செய்தியில்லை பின்வந்த எவ்விலக்கியங்களிலும் பூவைப் பற்றிக்குறிப்பும் இல்லை. கலித்தொகையில் பாங்கர் என்னும் கொடிப் பூவைக் கண்ட நச்சர் அங்கு பூச்சிறப்பில்லாத ஒமையைக் குறித்தது அடிசருக்கிய எழுத் தேயாகும். அச்சருக்கல் எழுத்திலும் ஒமைப் பூ என்று பூ அமைய வில்லை. 'ஒமை’ என்று மட்டுமே அமைந்தது. மலர்களிற் சிறந்த முல்லையொடு சேர்ந்த இதனை அவர் விடுத்தாலும் பாங்கர் என்பதற்குப் பக்கம் என்னும் பொருள் இருப்பது போன்று இது முல்லையோடு மதிப்புடைய அதன் 'பக்கமஸ்'ரேயாகும். 53. ஆக்க அரிய முக்கு மலர். குமிழம். - குமிழம் பூ என்றதும் மூக்கிற்கு உவமையாகும் பூ" என்பது தோன்றும். இரண்டு கண்களுக்கிடையே மூக்கை ஒவியமாகத் தீட்டுவதை இளங்கோவடிகளார், இருகருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி - என மூக்கைக் குமிழம் பூவாகக் குறித்தார். 'குமிழ் மூக்கு இவை காண் ' என்றார் சாத்தனார். தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும்’ என்றார் கம்பர். இவ்வாறு மூக்கிற்குக் குமிழம் பூவைச் சொல்லியுள்ள இலக்கியங்களை நோக்கினால் சிலப்பதி காரத் தொடக்கமான இலக்கியங்களாகவே அமைகின்றன. சங்க இலக்கியமாம் கார் நாற்பது, " . ... . ... குமிழின் பூ பொன் செய் குழையில் துணர துரங்க'4 -எனப் பொன் குழையாகப் பாடியது. நற்றினையும் 'ஊசலாடும் ஒண் குழை' யாகச் சொல்லி அப் பூ உதிர்ந்து கவிழ்ந்து கிடப்பதைக் கல்லென வரிக்கும் 5 எனக் கூழாங்கல்லைப் போன்று காட்டும் என்றது 1 சிலம்பு . 5:005 4 கார் நா : 28 2 மணி : 20 : 48. நற் : 286 : 8. 8 கம்ப. நாடவிட்ட : 52.