பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646


குமிழில் செங்குமிழ், பெருங்குமிழ், நிலக்குமிழ் என மூன்று வகைகள் உள்ளன. நிலக்குமிழ் கொடி மற்றைய இரண்டும் குறு மரங்கள். ஒன்று முள் கொண்டது. மூன்றின் பழங்களும் மஞ்சள் நிறத்தவை. மானுக்கும் ஆட்டிற்கும் உணவாகும். 'உழைமான் அம்பினை திண்டலின், இறைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் குமிழ்' - என்னும் காவல் முல்லைப் பூதனார் பாடல் பெண்மான் உராய்வதால் பழம் உதிரும் என்கின்றது. இது முள்ளற்றது. இதற்குத் தலைமகள் அணியும் பொன்காசு உவமை யாயிற்று. இம்மரம், "அத்தக் குமிழ்' எனப்படும். எனவே, பாலை நிலத்து மரம், 'இமிழிசை வானம் முழங்கக் குமிழின் பூப் பொன்செய் குழையில் துணர்துங்க' - என்னும் கார் நாற்பதின் பாடல் இப் பூ கார்காலத்தில் மலர்வதையும். இது கொத்துப் பூ என்பதையும், தொங்கி அசைந்தாடும் என்பதையும் குறிக்கின்றது. பொன்செய் குழை என்றதனால் இதன் பொன் நிறமாம் விளக்கமான மஞ்சள் நிறம் அறிவிக்கப்பட்டது. தொங்கி அசைதல் குறிக்கப்படுவதால் கோட்டுப் பூவாகும், குமிழம் பூ மணி வடிவான சிறிய புறவிதழில் நான்கைந்து பெரிய அகவிதழ்களைக் கொண்டது. புனல்வடிவ அகவிதழ் ஒரு பக்கம் முட்டிக்கொண்டு வளைந்திருப்பதே மூக்கிற்கு உவமை யாயிற்று. இப் பூவின் பெரிய அளவு, முனை மொக்கையாயுள்ள மூக்கிற்கு நிகராக ஈடுகொடுக்கும் உவமையாகும். நிகண்டுகள் கூம்பல் கடம்பல்”3 என்னும் மறுபெயர்களைக் கூறியுள்ளன. பெயரளவில் கூம்பினாலும் கடம்பு அல்ல என்றாலும் மூக்கிற்கு உவமையானமை இதற்கொரு சிறப்புதான். கம்பர் மூக்கை "ஆக்க அரிய மூக்கு' என்றார். ஆக்க அருமையான மூக்குமலர் குமிழம். . eAAA AA LLSLLLeeAeAeAMAeeS 1. நற் : 274 : 4.5, 2 நற் 6 : 7 தி கம்ப : துர்ப்ப 125; 1