பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/667

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. காதுக்கொடி மலர்.

வள்ளை.

மூக்கிற்குக் குமிழ் என்றால் காதிற்கு வள்ளை என்பர். வள்ளை ஒரு நீர்க்கொடி (மது.கா:254). சேறுள்ள வயலிலும் படரும் (புறம்:399). பின்னிப்பின்னிப்படரும் (புறம் : 16). இதன் ೧ಕ್ಫ9, தண்டு தூம்பான உள் கூடுள்ளது என்பதைப் பரணரும் நக்கீரரும் நன்முல்லையாரும் 'அம் தும்பு வள்ளை' எனப் பாடியுள்ளனர். இக்கொடியின் இலையைச் சமைத்துண்ண மகளிர் கொய்வர்.2 இவைபோன்று கொடியையும் கீரையையும் பற்றிய கருத்து களையே சங்க இலக்கியங்களில் காண முடிகின்றது. மணிமேகலையில்தான் "வள்ளைத் தாள் போல் வடிகாது இவைகாண்" எனக் காதிற்கு உவமையாக முதன் முதலில் வந்துள்ளது. அஃதும் இதன் பூ அன்று; வளைந்து நெளிந் துள்ள இதன் கொடித் தண்டின் வடிவமே காதின் அமைப்பிற்கு உவமை கூறப்பட்டது. கம்பர், இராமன் பேச்சில் 'கொடிவள்ளாய் ............சீதை காதே' என வள்ளைக் கொடியையே காது என்றார் திரிகூடராசப்பக் கவிராயர் சிங்கன் சிங்கி உரையாடலில். "வள்ளைக் கொடியிலே துத்திப் பூ பூப்பானேன் சிங்கி?"க -> என்றார். வள்ளைக் கொடிக்கும் காதிற்கும் உள்ள உறவைக்காட்டு வது போன்று பிங்கல நிகண்டு வள்’ என்னும் சொல்லிற்குக் ‘காது’ என்னும் பொருளையும் சேர்த்தது. வள்ளையின் மலர்பற்றிப் பண்டை இலக்கியங்களில் செய்தியில்லை. சுந்தரமூர்த்தி நாயனார், 'சள்ளை வெள்ளையங் குருகுதான துவாம் எனக்கருதி வள்ளை வெண்மலர் அஞ்சி மறு கியோர் வாளை'6 - என இப் பூவைப்பாடி யுள்ளார். இதுகொண்டு, இப் பூ வெண்மை நிறமுள்ளது; கொத்தாகக் குருகு போல் பூக்கும் என்றறியலாம். நிகண்டுகள் ஒருமுகமாக இதற்கு நாளிகம் என்றொரு பெயரைக் கூறியுள்ளன. நாளம்' என்னும் தண்டுத் தொடர்பில் பெயர் பெற்றது. 1 அகர் : 376 : 14; 86 : 3; 48 : 6. 4. கம்ப பம்பை : 31 2 பதிற் : 29 :2. 5 குற். குற : 180 3 மணி 20 - 5. 6 சுந். தே வாஞ்சியம் : 4