பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/669

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
649


வாங்கு துளைத் துக்ரின் (பவளத்தின்) கங்கை பூப்ப i என்றார், நெய்தல் தத்தனார். இது தனி மலரில் சிறிய பூ. ஒவ்வொரு மலரும் நன்னான்கு அகவிதழ்களையும் அவற் றினிடையே எட்டு அல்லது ஒன்பது பஞ்சுபோன்ற மகரங்களையும் கொண்டது. அகவிதழ்களும் மகரங்களும் வெண்மை நிறமானவை. இவ்வெண்மை வாய்ந்த கொத்திற்குப் பரணர் ஆலங்கட்டியை உவமையாக்கி, " ... ... ... ... ஈங்கை ஆலி அன்ன வால்வி தாஅய்' என்றார். இதிலுள்ள வால் வி' என்பதும் இதன் வெண்மையைக் குறிக்கின்றது. அகவிதழில் நீண்டிருக்கும் மகரங்கள் பஞ்சுபோன்று துய் என்றிருத்தலின் "வண்ணத் துய்ம் மலர்' ஈங்கைத் துய்த்தலைப் புது மலர்' எனப்பட்டது. இப்பஞ்கத் தன்மை யாலும், வெண்மையாலும் கொத்தாயுள்ள திரட்சியாலும் இது சிட்டுக் குருவிக் குஞ்சு போன்று தோன்றுவதாகக் கண்ட ஒரு புலவர், 'நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன சிறு பல் பிள்ளை' -என்றார். பெயர் தெரியாத இப்புலவர் இப்பூவிற்குச் "சிட்டுக் குஞ்சு மலர்' எனப் பெயர் சூட்ட ன்வத்துள்ளார். இப்பூ பாறையில் உதிர்ந்து கிடப்பது பெண்கள் விளையாடி விட்டுப் போட்ட கழற்சிக் காய் போன்றிருந்ததாகக் கண்ண கனா ரால் பாடப்பட்டது. " இக்கொடியின் தளிர் பூவைவிட அழகோடு காட்சிதரும். அஃதும் மாரிக்காலத்தில் எழில்பெற்றுத் தோன்றும். அதனால், "மாரி ஈங்கை மாத்தளிர்” எனப்பட்டது. இங்கு மாரி என்பது தளிரால் குறிக்கப்பட்ட பருவம். இது கூதிர்ப்பருவத்தில் அரும்பி மலரும். முன்பணிக் காலத்தில் யாவும் உதிர்ந்துவிடும். எனவே, இது மலர்ச்சியால் கூதிர்காலப் பூ. அகம் : 243 - 2. 5 நற் : 181 : 4, 5, அகம் 125 3, 4, 6 நற் : 79 : 1-4, குறுத் 880 - 6. 7 அகம் : 75 : 1. நற் : 193 1, 2. 8 ஐங் : 458,