பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650

ម៉ង់ இது பிரம்போடு சார்த்திப் பேசப்படுவதாலும், பெரிது முல்லைத்திணைப்பாடல்களில் பிரிவுத்தொடர்புடன்வருவதாலும் முல்லை சார்ந்த பாலை எனல் வேண்டும். சீத்தலைச் சாத்தனார் ஒரு பாடலில் மருத வயலில் இச்கொடியைக் காட்டியுள்ளார். 1 நீர்ச்சார்பால் அவ்வாறு கூறப்படினும் நிலச்சார்பால் முல்லை நிலம் திரிந்த பாலைப் பூ என்பதை 'இண் டிவர் ஈங்கைய கரனே? . - என்னும் பெரும்பதுமனார் பாடல் கரம்’ என்னும் சொன் லால் குறிக்கிறது. - உரையாசிரியர்கள் இதற்கு 'இண்டு 'இண்டை 'இண்டம் பூ' எனப் பொருள் எழுதியுள்ளனர். காரைக்காலம்மையார் "இண்டை சுடுகாட்டுப் பூ எனப்பாடியுள்ளார். குறிஞ்சிப் பாட்டில் இப் பூ தொடுக்கப்பட்டிருப்பினும் கமழும் மணமோ சூடப்பட்டதாகக் குறிப்போ எங்கும் காணப் படவில்லை. 56. கொட்டான் மலர். முசுண்டை. முசுண்டை ஒரு கொடி. “புன்கொடி முசுண்டை' என்றபடி இக்கொடி புல்லியதுதான். ஆயினும், இதன் இலைகள் நன்கு தழைத்திருக்கும் இத்தழைப்பின் தோற்றத்தால் 'கொழுங்கொடி முசுண்டை’’ எனப்பட்டது. ~ இதனை முகட்டை என நாட்டுவழக்கில் கூறுவர். ஆனால் முசுட்டை என நூல் வழக்கில்லை. இதற்கு மறுபெயர் இல்லை. முசுண்டை' என்னும் ஒரு பெயரையே கொண்டமை யால் நிகண்டுகளில் இடம்பெறவில்லை. இதன் முகை சற்று திருகிச் சுரிந்திருப்பதால், 'சுரிமுகிழ், முகண் டை" என மதுரைக் காஞ்சியும், அகநானூறும் குறித்தன. இப் பூ புறத்தே திரட்சியுடையது. வெண்மை நிறங் கொண்டது. அதனால், “வாலிய மலர' 'வாலிதின் விரிந்த'. "பொறிப்புற வான் பூ' வெண்பூ முசுண்டை' எனப்பட்டது 1 அகம் , 808, - 2 தற் : 2 : 6.