பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652

ម៉ត់ அக்காலத்தும் சூடப்படாமையால்குறிஞ்சிப் பாட்டிலும் இடம் பெறவில்லை, இருப்பினும் இரவுக் காட்சியில் ஒளிரும் எழிற் பூ. 57. பொரி மலர், - புன்கு. கட்டித் தழுவியவன் 'விட்டுப் பிரியேன்” என்று குட்டித் தெய்வங்களின்மேல் ஆணையிட்டான்; சூள் உரைத்தான். இது நடந்த இடம் கடற்கரை மணல்மேடு. இதனை அவள் நினைவு கூர்ந்தாள்: - "அவர் சூள் உரைத்த இடம் வேலன் வெறியாடும் களம் போன்று காட்சியளித்தது. அம்மணற்பரப்பு வேலன் செந் நெல்லின் வெண்மையான பொரியைச் சிதறியதுபோன்றிருந் தது. ஆம் பொரிபோன்ற சிறிய பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அவ்விடம் புன்க மரத்தின் அடி இடம். அதன் பூக்கள்தாம் சிதறிக் கிடந்தன, - இதனைத் தரும் கோப்பெருஞ் சோழன் பாடல் இது: ஆனைமுதிர் புன்சின் பூத்தாழ் வெண் மணல் வேலன் புனைந்த வெறியயர் கள ந்தொறும் செந்நெல் வான்பொரி சிதறி அன்ன எக்கர் (மணல்மேடு) ) புன்கின் பூ என்றாலே புலவர் அனைவரது நினைவிலும் நெல்லின் பொரிதான் நின்றது. பாடிய அனைவரும் 'பொரிப் புன்கு" என்றே பாடினர். அதிலும், 'பொரிசிதறி விட்டன்ன புன்கு? -எனப் பொரி சிதறியதாகப் பாடினர். இவைகொண்டு புன்கம் பூ முழுதும் வெண்மை நிறங் கொண்டது எனக் கொள்ளக்கூடாது. அப்பொரி செந். நெல்லின் பொரி எனப்பட்டது. திருத்தக்கத்தேவர் இதனைத் தெளிவாக்கினார். நெல்லைப் பொரித்தால் நெல்லரிசியின் மேல் சிவப்பு தோன்றுமன்றோ? அச்செம்மையுடன் அரிசிவெண்மை யாகப் பொரிந்து மலர்ந்திருக்கும். இதனை உளத்துக்கொண்டு 1 குறு : 53 : 2-5, - 2 திணை. நூ. 64 : 4, .