பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

653


"செந்தலைய வெண் கறைய புன்கம் பொரி அணித் தனவே' என்றார். இதன்படி புன்கம் பூ பொரியளவில் சிறிய தாகத் தலைப்பகுதியில் சிவப்பும், இதழ்கள் வெண்மைக் கறை படிந்தது போன்ற நிறமுங்கொண்டு தோன்றுவதைக் காணலாம், தலைவியின் நினைவுகூர்தலில் புன்க மரத்தைக் கடற்கரை யின் மணல் வெளியில் கண்டோம், இது நெய்தல் நிலத்தில் வந்திறங்கியதாகும். இதன் பிறப்பிடம் பாலை நிலம். இதனை இம்மரம் இணைந்துள்ள பிற மரங்களைக்கொண்டு அறியலாம். எரிமலர் இலவ மரத்துடன் இப்பொரி மலர் மரம் நெருங்கி வளரும் (கலி 33 : 10, 11). பூக்கள் உதிர்ந்த குரா மரக்கிளை களின் இடையே தன் கிளையைப் பரப்பிப் பூத்து அம்மரத்திற்கும் பொலிவு தரும். இலவமும், குராவும் பாலை நிலத்து மரங்கள். எனவே, புன்கு பாலை நில மலர். இது பூத்துக்குலுங்கிய பருவத்தைத் 'தண்பத வேனில்"? என்றார் பெருங்கடுங்கோ. இளவேனிற்பத்திலும் 8 இதனைக் காட்டியுள்ளார். எனவே இது இளவேனிற் பூ. பொரியளவான இச்சிறிய பூ சூடுதற்கு வாய்ப்பாகாதது. இதனால் இது குறிஞ்சி மேடையில் இடம்பெறவில்லை. ஆனால், இதன் தளிர் பயன்பட்டது. அதனால், - தளிர் புன்கின் தாழ்.கா : - என தளிர் இதன் சிறப் பாகக் குறிக்கப்படும். இத்தளிர் ஒளியுள்ள மென்மையானது; தண்ணென்று குளிர்ந்திருக்கும்; எழிற்பசுமையாகத் தோற்ற மளிக்கும். இதனை மகளிர் இளவேனிற் பருவத்தில் சுணங்கு படர்ந்த மார்புகளில் அப்பிக்கொள்வர். இத்தளிர் மார்பில் நன்கு படியுமாறு அப்பப்படுவதை இலக்கியம் திமிர்தல்' எனக் குறிக்கும். - .. பெருங்கடுங்கோ, 'யொரிப்பூம் புன்கின் எழில்தகை ஒண் முறி (தளிர்) சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி'க -என்றார். அவரே பிறிதோரிடத்தில் "பொரிப்பூம் புன்கின் மூரிதிமிர் பொழுதே"9 - என்றார். 1 சீவ, P : 1849, 4 பொருந் : 146, 2 ஐங் : 267 5 நற் : 9 5, 8 8 ஜங் 341 - 6 ஜங் : 847