பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654


புன்கமரம் தன் பொரி மலரைச் சூட வாய்ப்பற்றதாகக் கொண்டாலும் தளிரால் அகத்துறையில் புகுந்து அழகும் நலமும் மகிழ்ச்சியும் நல்கியது. புறத்துறையிலும் தன் பெயரால் திருப்புள் கூரைக் கண்டு நந்தனார்க்குக் காட்சி ஊராக்கிற்று, 58. துவலை மலர்த்து மலர். தனக்கு - நுனா. 'தனக்கு' என்னுஞ்சொல் சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் பல் பூந் தணக்கம்' என ஒரே இடத்தில் வந்துள்ளது. பிற இலக்கியங்களிலும் பெருங்கதையில் மட்டும் "தண் பூந் தணக்கம்' என ஒரே இடத்தில் வந்துள்ளது. இவ்விரு தொடர்களைக் கொண்டு, தணக்கம் என்பது பல பூக்களைப் பூக்கும் என்றும், குளிர்ந்த பூவைக்கொண்டது என்றுமே அறிய முடியும். நச்சினார்க்கினியர் பல பூக்களையுடைய தணக்கம் பூ' என்று எழுதினார். இவையன்றித் தணக்கம் என்ற பெயரில் வேறு ஒன்றும் அறியக் கூடவில்லை. நிகண்டுகள் "தனக்கு துனாவே' என்றும், 'துணவு தனக்கே" - ன்றும் தணக்கை நூணா என்கின்றன. அததற்கு முதன்மை கொடுத்தும் தேற்றேகாரம் கொடுத்தும் பெயரிட் டுள்ளன. பிற்கால உரையாசிரியர்கள் தனக்கை நுணாவாகக் கொண்டனர். இது பொருந்துவதே. நுணா, நுணவு, துணவம் என்னும் மூன்று பெயர்களையும் சங்க இலக்கியங்களில் நான்கு நூல்களில் காண்கின்றோம். இவ்வாறு நான்கு நூல்களில் நுனாப் பெயர்களுடன் பூவைப் பற்றிய விளக்கத்தையும் பெற முடிகின்றது, இவ்வாறு குறிக்கத் தக்க நிலைபெற்ற இப்பெயரைக் கபிலர் காட்டவில்லை. நுனா வையே தனக்கமாகக் கருதியதால் அப்பெயரில் குறித்தார் என லாம். எனவே, தனக்கத்தின் இணை பெயர் நுனாவாகின்றது. செடியியலும் ஓரினத் தொடர்புப் பெயராகக் குறிக்கின்றது. துணா, நாட்டு வழக்கில் மஞ்சள் நாறி” எனப்படுகின்றது. இம்மரத்தின் உட்பகுதி நல்ல மஞ்சள் நிறத்தில் விளங்குவதும் மஞ்சள் மணத்தை வீசுவதுமே கரணியங்களாகும். இம் மஞ்சள் 1. குறி. பா 85 3 பெருங் இலா 15:15,