பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/675

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
655


நாறி என்பதையே மலைஞாலத்தார் மஞ்சணாத்தி (மஞ்சள்நாறி. மஞ்சள் நாற்றி - மஞ்சணாற்றி - மஞ்சணாத்தி.) என் கின்றனர். இதனை ஒரு சில மர வணிகர் தணக்கம் என்றும் குறிக்கின்றனர் எனவே, துணாப் பெயரில் வரும் கருத்துகள் தனக்கத்தைக் குறிப்பதாகக் கொண்டு இப் பூவின் விளக்கத்தை அறிய வேண்டும். தனக்கத்தை "நுனா’ என்னும் பெயரில் நாம் மரமாகக் கண்டு வருகின்றோம். இருஞ்சினைக் கருங்கால் நுணவம்' என்பதில் இருஞ்சினை' என்பதும் மரம் எனக் காட்டுகின்றது. எனவே, இதன் பூ கோட்டுப் பூ. உடன்போக்கில் கொண்டு செல்லவிருக்கும் தலைவன் தலைவிக்குப் பாலைநில வழியை அறிவிக்கின்றான். "கருங்கால் மராஅம் நுணவோ டலர இருஞ்சிறை வண்டினம் பாலை முரல அரும்பிய முள்ளெயிற் றஞ்சொல் மடவாய் - விரும்பு நாம் செல்லும் இடம்' -இதில் பாலைப் பண், பாலைக்குரிய மராமரம், உரிப்பொருள் உடன் போக்குப் எனப் பாலைகளின் தொடர்புள்ளது. பிறவற்றாலும் இம்மரம் பாலை நில மரம். ஐங்குறு நூற்றில் இளவேனிற் பத்தில் இளவேனிற் பருவ மலர்களுடன் 'கருங்கால் நுணவம் கமழும் பொழுது - என இளவேனிற் பருவம் குறிக்கப்பட்டுள்ளது. 'நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுண்வம்' -என இதனில் தேன் சிந்துவது குறிக்கப்பட்டுள்ளது. ஓரளவில் மணமுள்ளது. ஆனால் சூடியதாகக் காண இயலவில்லை. குறிஞ்சி மேடையில் சேர்ந்ததால் சூடப்படுவதாகக் கொள்ளலாம். இம்மரம் பாலை நிலத்ததாயினும் குறிஞ்சியிலும் வளரும். அங்குள்ள சிற்றருவியின் நீர்த்துவலையால் இது மலர்ந்ததைக் குடவாயிற் கீரத்தனார், 'சிறு வெள் ளருவித் துவலையின் மலர்ந்த . கருங்கால் துணவின் பெருஞ்சினை வான்பூ' -எனப் பாடினார். இவ்வகையில் துவலை மலர்த்து மலராகின்றது. இப்பாடலிலுள்ள 'வான் பூ” என்னும் சொல்லாலும், இன்றும் நம் கண்ணாலும் இம்மலரின் வெண்மையைக் காண்கின்றோம். 1 ஐங் 1842 4 # pur : 51 2 திணை ஐ 16 5 அகம் : 815 :15, 18, 8 ஜங் : 342 . . . .