பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/678

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
658


(மாணிக்கம் : 39) இம்மலரின் நிறத்தைக் கூறியுள்ளன. குருவிந்தம் செம்மணி வகை. எனவே திலக மலர் செம்மை நிறத்தது. குருவிந்த மணி நிறத்திற்கு உவமையாகிச் செம்மணி மல: ராகின்றது. 61. பாலைப் பெயர் பெற்ற குறிஞ்சி மலர். குடசம். - - "குடசமும் வெதிரமும்' -என மலை நிலத்து மூங்கிலுடன் பாடப்படும் இது குறிஞ்சி நிலத்து மரம். வெண்மை, செம்மை என்னும் இரு வண்ண மலர்களைத் தனித்தனியே கொண்டது. இதன் வெண்மை மலர் மரத்தை "வெட்பாலை' என்றனர். வெள்-பாலை என இதில் வெண்மை அடைமொழி இருப்பது பொருந்துகின்றது. "வான் பூங் குடசம்' என்னும் கபிலர் தொடருக்கு நச்சர் 'வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப் பூ' என்றெழுதினார். இவ் வெண்மைப் பூவின் அமைப்பைக் கொண்டு இடைக்காலத்தார் "கிரிமல்லிகை என்றனர், சேந்தன் திவாகரம் இதைக் கொள்ள வில்லை. சிலம்பில் புறஞ்சேரியிறுத்த காதையில் குடசம்' என்ற தற்கு அடியார்க்குநல்லார் வெட்பாலை' என்றார். அடுத்து ஊர்காண் காதையில் 'குடசம் கார்காலத்துச் செம்மை பூக்களின் வரிசையில் அமைந்துள்ளதால், "செங்குடசம் பூ" என்றார். இதுகொண்டும் குடசத்தில் செம்மை வகை உள்ளதை அறியலாம். 'குரற்றலைக் கூந்தல் குடசம் பொருந்தி" - என மதுரை பகளிர் இதன் செம்மை நிறப் பூவைக் கூந்தலில் சூடியதைச் சிலம்பு பாடியது. மல்லிகைப் பெயர் பெற்றுள்ளமையால் வெட்பாலையாம் வெண்மைக் குடசப் பூவும் சூடப்பட்டிருக்கலாம் 1 சிலம்பு: 18 : 157 மணி 8 184 3 εωώι , 14 : 87. 2 фун ид. 67, - え -