பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660


பூ' என்ற அளவோடு நிறுத்தினார். சேந்தன் திவாகரத்தில் இது பற்றிய பேச்சே இல்லை. சங்கப் பாட்டுகளில் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் பெயர் வந்துள்ளது. பரஞ்சோதி முனிவர் இம்மலரைக் குருவிந்த மணி நிறத்திற்கு உவமை கூறினார் 3 - "செங்கதிர் மேனியான் போல் அவிழ்ந்தன செழும் பலாசம்”8 -எனச் செங்கதிர் நிறத்தைக் காட்டினார். இவர் முள்முருக்காகக் கொண்டார் போலும். ஆனால், பெருங்கதை முதலிய நூல்கள் முள்முருக்கையும் பலாசையும் தனித்தனி வெவ்வேறாகப் பாடியுள்ளன. இதுபற்றிய முடிவிற்கு மருத்துவ நூல்களே அழைத்துச் செல்கின்றன, புரசையே பலாசாகக்கொண்டு மருந்துகளை உருவாக்கிப் பயன்கண்டுள்ளனர். இதுகொண்டும் ஆங்காங்கு பொருந்தும் குறிப்புகளைக் கொண்டும் புரசையே பலாசாகக் கொள்ளவேண்டும். புரசு "ஆற்றுப் பூவரசு எனப்படும். பூவரசம் பூப் போன்ற அமைப்பில் சற்றுச் சிறிய அளவுள்ளது. அகன்று நீண்ட மஞ்சள் நிற அகவிதழ்கள் சுற்றடுக்காக அமைந்திருக்கும். ஒர் அகவிதழில் உள்ளடியில் புளியங்கொட்டை அளவில் பெரிய செம்புள்ளி விளங்கித் தோன்றும். இது மருதநிலத்தது. இளவேனிலில் பூக்கும். பொட்டு போன்று அகவிதழ் பெற்றுள்ளதோற்றம் சிவந்த குங்குமச் செம்பொட்டு இட்டுக்கொண்டது போன்றதாகும். இதனால் இதனைச் செம்பொட்டு மலர்' எனலாம். 64. நீராடை போர்த்த மலர். அழிஞ்சில். 'சே' என்றொரு மரம் தொல்காப்பியத்தில் 4 இலக்கணம் பெற்றுள்ளது. சேம்பூ என்று விதியும் பெற்றது. "அழிஞ்சில் சேமரம், அங்கோலமாகும்” என இது 'அழிஞ்சில் பெயர் பெற்றது. அங்கோலம், அழிஞ்சி என்றும் வழங்குவர். சிலம்பில் 'சே' என்பதற்கு அருஞ் சொல்லுரைகாரர் "உழிஞ்சிலுமாம்; அழிஞ்சிலுமாம்" என்றார்; அழிஞ்சில் பொருந்தும். 1 குறி. սո: 8 . ... ' 4 தொல் எழுத்து 279, 2 திருவிளை மாணிக்கம் , 89 : 8, 5 பிங், 2789, திருவிளை பு:கருமிக்கு 12 1, .ே சிலம்: 12:2, 8