பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



68. விரிந்த அரக்கு மலர்.

புழகு.

மலையெருக்கு புழகு' எனப்படும். இஃதொரு மலைச்செடி. இதன் வேர் கிழங்காகக் கற்பிளவுகளில் பாய்ந்திருக்க இச்செடி தழைத்து வளரும். பல செடிகள் நெருங்கியிருக்கும். இவற்றை மலைபடுகடாம், - "அழுந்துபட்டு அலமரம் புழகு அமல் சாரல்’ - என்னும் ஒரடியால் விளக்கியுள்ளது. பருத்து அழகானவற்றைக் குறிக்கச் சங்க இலக்கியங்களில் பரு + ஏர் = பரேர் என்னும் அடைமொழி பல பாடல்களில் அமைந்துள்ளது. இவ்வடைமொழியோடு 'அம் என்னும் அழகுச் சொல்லையும் சேர்த்துக் கபிலர் 'பரேரம் புழகு" என்றார். இது கொண்டு இப்பூ பருத்தது; மிக்க பேரழகுடையது என்று கொள்ள லாம். இதற்கு நச்சர் பருத்த அழகினையுடைய மலையெருக்கம் பூவும் என்றவர் 'செம்பூவுமாம் புனமுருங்கையும் என்பர்” என் றார். செம்பூ நிறத்தளவில் பொருந்தும். புனமுருங்கை வேறு. மலையெருக்கே பொருந்துகின்றது. கொங்குவேளிர்"அகன்றலைப் புழகு 2 என்றமை கொண்டு இது அகன்று விரிந்து தழைப்பதை அறியலாம். - - - . மேலும், கபிலர் இதன் நிறத்தையும் அழகமைப்பையும் விரிக்கும் கருத்தில் 'அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்’ என்றார். அரக்கு போன்று செம்மை நிறங்கொண்டது; அரக்கைச் சிதறிவைத்ததுபோன்று அழகமைப்புடையது. இப்பூ. புகுப் குறிஞ்சி நிலத்துக் கோட்டுப் பூ. அரக்குச் செம்மையில் பேரழகுடையது. நற்செம்மைப் பூக்களுக்குரிய கார்ப் பருவத்தை இதற்குக் கொள்ளலாம். இலக்கியங்களில் இப் பூவைக் காணக்கூடவில்லை. மற்றொரு சிறப்பிடத்தைக் கபிலர் இதற்கு அமைத்துள்ளார். மலர்ப் பட்டியலை வேங்கைப் பூவுடன் முடிக்க எண்ணியவர், . . . ... வேங்கையும் பிறவும் அரக்கு விரித்தன்ன பரேசம் புழகு டன்' என வண்ண | oಖ6ು : 219., , , 8 குறி. பா :95, 96. 2 பெருங் இலா 12 : 27, ့် -