பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



70. நீர்க்கொடி மலர். ... •

செங்குரலி.

'சிறுசெங்குரலி' எனக் கபிலரும் கொங்குவேளிரும்? பாடினர். இதனைக் கருத்தாமக் கொடிப் பூ என்பர். இவ்விரு பெயர்களைக்கொண்டே இப்பூவைப் பற்றி அறிந்துகொள்ளலாம்

  • தாமக்கொடி’ என்றால் நீர்க்கொடி. எனவே, கருமையான நீர்க்கெர்டியில் பூக்கும் பூ குரலி' என்றால் கொத்தானது. சிறிய அளவில் செம்மை நிறத்தில் கொத்துப் பூ. -

அடைநெடுங்கல்வியார் என்னும் புலவர் இதனைச் செங்குரவி' என்று பாடினார். நீர்நாய் வாளை மீனைக் காலை உணவாகப் பெறுவதற்கு இக்கொடி படர்ந்த குளத்தைக் கலக் கியது. இதனை, -- "ஒண்செங் குரலித் தண்கயம் கலக்கி ... -- வாளை நீர் நாய் நாள் இரை பெறு உம்' என்றார். இது கொண்டு இக்கொடிப் பூ நீர்வளம் மிக்க மருத நிலத்தது என்றும் கார், கூதிர்ப் பருவங்களில் மலரும் என்றும் அறியலாம். 71. வேர்ப் பெயர் மலர். செங்கோடு வேரி, வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியன மணங்கமழும் வேர்கள். இவற்றை வேரி என்பர். இவைபோன்று மனக்கும் வேர்கொண்ட ஒரு மரத்தின் பூ, "கோடு வேரி" எனப்பட்டது ககோட்டு வேரி' என்பது கோடு வேரி' என்றாகியிருக்கும். . கபிலர் இப்பூவின் செம்மை நிறங்கருதிச் செங்கோடு வேரி" என்றார். "செங்கோடுவேரிப் பூ" என்றார் நச்சர் கார்ப்பருவ ஒப்பனைப் பூக்களைக் கூறும் இளங்கோவடிகளார் - செங்கொடு வேதிச் செழும்பும் பிணையல்" என்றார். செங்கோடு என்பதே சீர் கருதிச் செங்கொடு’ என்றுள்ளது. கார்ப்பருவத்தில் செம்மை நிறமுடையவற்றால் ஒப்பனை செய்து கொண்டதைப் பாடுமிடத்தில் இஃதமைந்துள்ளது. இப்பூவைக் 1 ծն. սր : 82 4 குறி 64, - 2 .பெருங் இலா , 12 29, 5 சிலம்பு . 14 91. 8 புறம் :288 : , 2, . . . . . . .