பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/687

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
667

႕႕ဂို கொண்டு. செழிப்பான பிணையலாக்கி அணிந்துள்ளனர். எனவே சூடும் பூ. - & - . கொங்குவேளிரும் இதனை முல்லை நிலத்து ஆற்றங்கரை மரங்களின் வரிசையில் வைத்துள்ளார். இவ்வாறு தேர்ந்து அமைக்கும் முறையை இவர் ஆங்காங்கு கையாண்டுள்ளார். இவைகொண்டு, இக்கோட்டுப் பூ, முல்லை நிலத்தில் கார் காலப் பூவாகச் செம்மை நிறத்தில் விளங்குவது. . . . . 72. ஒம மலர். வானி. வானி என்னும் பூவைக் குறிஞ்சிப் பாட்டு ஒன்றிலேயே காண்கின்றோம். இதற்கு நச்சர் 'வாணிப் பூ” என்று பொதுவில் எழுதி நழுவினார். வானி பல பொருள் ஒரு சொல். வான யாறு என்றொரு ஆறு உளது. அகர முதலிகளில் ஒயம் என்னும் பூண்டு, வானியாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஓமம், வாணி இரண்டும் தமிழ்ச் சொற்கள். . . .", ஒருவகை ஒமம் சமற்கிருதத்தில் பரசிகாய வானி எனப் படும். இப்பெயரில் 'வாணி’ என்னும் சொல் அமைந்துள்ளமை யும் ஒரு சார்புச் சான்றாகின்றது. இத்தொடர்புகளில் வானிப் பூவை ஒமப் பூ எனலாம். ஒமம் நிலத்தில் வளரும் ஒரு பூடு. எனவே, நிலப்பூவாகும். இப் பூ இளமஞ்சள் நிறங்கொண்டது. வெறும் பூடு அளவிலான இதனைக் கபிலர் மணப்பு வரிசையில் கோப்பாரா? சிறுபூளை, பஞ்சாய்க்கோரை, கஞ்சாங்கோரை, நாணல் முதலியவற்ற்ைக் கோத்துள்ளமையை நோக்கும்போது இல் தும் அமைக்கப்பட்டிருக் கலாம் என்றே படுகின்றது. - ஒம வித்து மணக்கும். இதன் பூவும் அவ்வகை மணங் கொண்டது. கொத்துப் பூ மலைப்பகுதிப் பூடாகிய இது குறிஞ்சி நிலத்தது. ஒமம் பூக்கும் பொதுப் பருவம் வேனிற் பருவமாகும். ஒமத்திலிருந்து வடிக்கப்படும் மருந்து நீர் ஒம நீர் எனப் படும். ஒமப்பொடி அறிவோம். இதன் பூவையும் மருந்துப் பொருளாகக் காட்டியுள்ளனர். . 2. கம்பர்