பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/688

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
73, பொன்நிறுவை மணி

கண்ணி. -

பூங்கொத்துச் சொல்லால் பெயர் பெற்ற குரலி போன்று தலைச் சூட்டு மலராம் கண்ணியாற் பெயர் பெற்றது ஒரு மலர். அதன் குறுமையும் நறுமையுங்கொண்டு கபிலர் அதனைக் குறு நறுங்கண்ணி என்றார். இவ்வடைமொழியால் முஞ்ஞையும் 'குறுநறுமுஞ்சை" எனப்பட்டது. இக்கண்ணிப்பூ குன்றி மணியைத் தரும் கொடியின் பூ. அவரைப் பூவைப் போன்று வடிவமைப்புடையது. இளஞ்செம்மை நிறங்கொண்டது. ஒழுங்கு வரிசையில் மேல்மேல் குறுகிய பூங் கொத்து. இக்கொத்தின் அமைப்பு தலையில் சூட அமைத்த கண்ணி போன்றது. அப்படியே கொத்தாகக் சூடிக் கொள்ளலாம். காட்டுக் கொடியாகிய இது முல்லை நிலத்தது. வேனிற் பூ. இதில் விளையும் குன்றிமணி பொன்னை நிறுக்கப் Juಿ புடும். குறிஞ்சிப்பாட்டிலன்றி வேறெங்கும் இப்பூ பற்றிய குறிப்பில்லை. - - 74. வாடற் பூ மலர். செம்மல் செம்மல் பல பொருள் ஒருசொல். வாடிய பூவைச் செம்மல் என்பதை அறிந்தோம். ஒரு மலரே இப்பெயர் பெற்றுள்ளது. .4 கபிலர் 'சேடல் செம்மல்” எனத் தனி ஒரு பூவாகப் பாட நச்சர் இதனைச் 'சாதிப் பூ என்றார். சாதிப் பூ ஒருவகை முல்லை. இது சற்று நீண்ட இதழ்களை உடையது. வெண்மை நிறத்தது. கொத்துப் பூ முல்லை நிலத்துக் கார்காலப் ي சூடும் பூ. வாடற் பூப் பெயரைப் பெறினும் மணங் கமழ்வது. வாடினும் மணந்து இப்பெயர் பெற்றிருக்கலாம். 1 குறி. பா. 72 3 குறி, பா 82 2 புறம் : - - . .