பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. குறத்தி மலர்.

வள்ளி.

வள்ளி என்பது கொடி நீரின்றேல் வாடும். வள்ளுவரும் 'வாடிய வள்ளி முதல் அரிந்தற்று' என்றார். மகளிர் தம் மார்பில் அழகுக் கோலமாக இக்கொடியின் உருவைப் பச்சை குத்திக் கொள்வர். - இப் பூவைக் கடப்ப மலர் மாலையின் இடைஇடையே வைத்து அழகுபடுத்தியதை நல்லச்சுதனார், - "சுருளுடை வள்ளி இடையிபுே இழைத்த" -என்றார். 'சுருளு தலையுடைய வள்ளிப் பூ' என்றார் பரிமேலழகர். இதன். படி இப்பூவின் மேற்பகுதி சுருண்டு தோன்றும். மருதநிலத்துக் கொடிப் பூவாகிய வள்ளிப் பூ இளமஞ்சள் நிறத்தில் இளவேனிற் பருவத்தில் மலரும். குறக்குல அழகி வள்ளி இதனாற் பெயர் பெற்றவள். முருகனைப் பாடும் கேசவனார், 'நறுமலர் வள்ளிப் பூ நயந்தோயே"3 -என இவளை மணக்கும் வள்ளி மலராக்கி நயக்க வைத்தார், கபிலரும் இப் பூவைக் குறித்துள்ளார்.4 76. செம்மணி மலர். மணிச்சிகை. கண்ணிப் பூவையே குறிக்குமோ என்னும்படி மணிச்சிகை என்றொரு மலரைக் கபிலர் குறித்துள்ளார். இதன் சொற்பொருள் கொண்டு இதனைக் குன்றிமணி மலர் எனக் கருத இடமுண் டெனினும் நச்சினார்க்கினியர் கண்ணியைக் குன்றி என்றெழுதி மணிச்சிகையைப் செம்மணிப் பூ என்று காட்டியுள்ளார். குன்றி மணியைப் போன்று மலர்க்கொத்தின் மேலுச்சியில் ஒருவகைச் செம்மணியைப் பெற்றுள்ள மலர் என்று கொள்ளுவதன்றி வேறு ஒன்றும் விளக்கம் பெறுதற்கில்லை. மற்ற்ெவரும் இதனைக் குறித்தாரல்லர். - 1 குறள் : 1804: 2 பசி 21 10 8 பரி 14:22