பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


இவ்வாறாக, ஆநிரைகளைக் கவர -வெட்சிப் பூ, கவரப்பட்டவற்றை மீட்க -கரந்தைப் பூ, எனத் தொடர்ந்து, பகைமேற் படையெடுப்பில் -வஞ்சிப் பூ, பகையேற்கும் எதிர்ப்பில் -காஞ்சிப் பூ, கோட்டை முற்றுகையில் உழிஞைப் பூ, முற்றுகை முறியடிப்பில் -நொச்சிப்பூ, களத்தின் கைகலப்பில் -தும்பைப் பூ, வெற்றியில் -வாகை பூ, -எனச் சூட்டப்பட்டன. அவ்வந் நிகழ்ச்சிகள் அவ்வப் பூக்கனின் பெயரால் திணைகள் ஆயின. இவற்றில், களத்தில் நேருக்கு நேர் நின்று கைகலக்கும் போரில் போர்க்குரிய நெறியுடன் துரய்மையாக ஒழுகுதலைக் கவனத்திற் கொண்டனர். அத்தூய்மையின் அறிகுறியாகத் தூய வெண்மை நிறம் வாய்ந்த தும்பைப் பூவை கொண்டமை குறிக்கத்தக்கது. . இவ்வாறே புறத்தினைப் பூக்கள் ஏனையவும் நிறத்தாலும் தன்மையாலும் அவ்வவ்வொழுக்கத்திற்கு இயைந்தனவாக அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு திணைகளுக்கும் மலர்களைத் தொடுத்ததில் பழந் தமிழரது இயற்கை வாழ்வின் உணர்வு மணக்கின்றது மலர்ப்பெயர்களைத் தினைகளுக்கு சூட்டியதன் அடிப்படை, அவர்கள் மலர்களைச் சூடியும் சூட்டியும் நுகர்ந்த உணர்வேயாகும். சின்னப் பூ மலர்களை அழகு கருதியும் சூடினர்: மனங்கருதியும் சூடினர்; அடையாளமாகவும் சூடினர். அழகு கருதி ஒப்பனைக் காக சூடுவதற்கு எல்லா மலர்களையுமே கொண்டனர். 洲3