பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



77. வல்லோசை வேண்டும் மலர்.

மந்தாரம்.

கற்பகம், மந்தாரம், சந்தானம், அரிசந்தானம், பாரிசாதம் எனப்படும் ஐந்தும் தேவருலகத்திலிருந்தும் கொணரப்பட்டவை. என்பது புராணக் கருத்து. சிலப்பதிகாரத்திற்கு முந்திய இலக்கியங்களில் மந்தாரம் பற்றிய செய்தியில்லை. எனவே, தமிழகத்தில் இது கி. மு. மலர் அன்று. தெய்வத் தொடர்பு காட்டியதால் பலவற்றிற்கும் பெருமை, யேற்ற இதன் பெயரைக் கூட்டினர். அந்திமந்தாரை, கொக்கு மந்தாரை (கொக்கிறகு), காட்டு மந்தாரை (ஆத்தி) எனச் செடி மரம் முதலியவற்றிற்கெல்லாம் பெயரேற்றினர். கதைப்படி இது மரம். அந்தி மந்தாரை சிறு செடி. இதனை 'அந்தி மல்லிகை" என்பர். . - ST '・ 'வெள்ளை மந்தாரம் முல்லை" 1 - - -என்றபடி இதன் நிறம் வெண்மை. அத்தி மந்தாரை பஞ்சளிலும் செம்மையிலும் பூக்கும். இஃதொரு காட்டுச் செடிஎன்ற வகையில் முல்லை நிலத்தில் கூட்டலாம். x- கண் ண கியார்க்குக் கல்லெடுக்க வஞ்சினம் கூறும் செங்குட்டுவன் 'கல் தாரான் எனில்' என்று தொடங்கி, 'அலர் மந் தாரமோ (டாங் கயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த ஒங்குவிறல் மாலை” யை வடவர் சூடுவதையும் பார்க்கின்றேன்' - என்றான். இஃது இந்திரனுக்கு மாலையாவ தென்றும், பாண்டியன் நெடுமாறனுக் குரியதாக இருந்ததையும் கண்டோம். (இந்நூற் பக்கம் 40) - - . . ... " இம்மலர் மாலையில் வண்டு காந்தார இசையை முரலு வதாகத் திருத்தக்க தேவர் எழுதினார்.8 - "மாணிக்க வாசகர், “ . ... "... விரையார் நறவம் . . . ததும்புமத் தாரத்தில் தாரம்பயின்று மத்தம் முரல்வண்டு 1 திருவிளை. பு : இந்திரன் முடி : 12, சிலம்பு : 25: 188, 189. 8 :வ. சி : 1959 4 கிருவா நீத்தல் 86.