நிகண்டுகளிலும் இதனைப் பட்டிகை’ என்று பிங்கலமும் பறிவை என்று சூடாமணியும் குறிக்கின்றன. சேந்தன் திவாகரத் தில் செய்தியில்லை. எல்லப்பநாவலர் எழுதிய சிராமலைப்புராாணம் இதன் பெயரால் செவ்வந்திப் புராணம் எனப்படுகிறது.
சாமந்தி என்னும் வழக்கை வைத்து ஒரு புலவர் தலையிற் சூடிச் செல்லும் ஒரு மங்கையைப் பார்த்து, இருபொருள்படும்படி "செத்த குரங்கை(சா மந்தியை)தலைமேற்சுமந்துதிரிந்தனளே'1 என்று பாடினார். செத்த குரங்கு பரஞ்சோதியார் குறித்தபடி செத்து வாடிக்கிடந்தாலும் வண்டிற்கு தேன் விருந்து வைக்கும்
79. கோரை மலர். எருவை.
சாய் என்றால் கோரை. மலையில் வளரும் பசுமைக் கோரை ஒன்று 'பைஞ்சாய்' எனப்படும். இதன் இலக்கியப் பெயர் எருவை இக்கோரையால் மகளிர் பாவை செய்து விளையாடுவர். இதனைப் பஞ்சாய்ப் பாவை’ என்பர். இதன் நாரால் மலர்க் கோதை தொடுப்பர். ஐங்குறுநூறு இதனைப் 'பஞ்சாய்க் கோதை'2 என்கின்றது.
இதன் மலர்க்கு இலக்கியத் தகுதி உண்டு. பரிபாடலில் வரும், 'எருவை நறுந்தோடு' என்பதை விளக்கும் பரிமேலழகர்
- 'எருவையது நறுந்தோட்டையுடையது. எருவை என்பது 'எருவை செருவிளை, மணிப்பூங் கருவிளை' (குறி. பா : 68) எனக் கபிலர் பெருங்குறிஞ்சியினும் வந்தது' எனக் குறிஞ்சிப்பாட்டின் ஆட்சியையும் எடுத்து மொழிந்தார். - - -
இவைகொண்டு, எருவைப் பூ நறியது. தோடு என்னும் அளவில் இதழ்களைக் கொண்டது என அறியலாம். இது செம்மை நிறக் கொத்துப் பூ.
"எருவை நீடிய பெருவரை4 என்று நற்றிணையில் ஈரிடங் களில் குறிக்கப்படுவது கொண்டும் மலைத்தொடர்புடனே எங்கு
1 தனிப்பாடல் 3 பரி ; 19:77 2 ஐங் : 54 : 5 நிதி 15::ே
பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/692
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
672
