பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/695

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
675


இதுபோன்று, இளம் மதலையாம் கண் ண னு க் குத் தாலாட்டு பாடிய பெரியாழ்வார், முதற்பாட்டை "மாணிக்கம்" என்று தொடங்கினார். அடுத்த பாட்டில் "ஒண் மாதுளம் பூ இடைவிரவிக் கோத்த' என்றார். மற்றோரிடத்திலும் அரை ஞாணில் மாதுளம் பூ கோக்கப்பட்டுள்ளதைப் பாடினார், இவ்வாறு, மாணிக்கத்துடன் நிறத்தால் தொடர்பு கொண்டது மாதுளைப் பூ , இப்பூவைத் தருவது ஒரு பெருஞ் செடி. எனவே, இது கோட்டுப் பூ. இச்செடி இமயமலை முதல் பால்கன் மலை வரையுள்ள மலையடிவாரக் காடுகளில் வளர்வது. எனவே இது, முல்லை நிலத்தது. தமிழகத்திற்கு வந்திறங்கியது. பயிர் செய் வதற்கேற்பப் பூக்குமாயினும் பெரும் பகுதி கார்காலப் பூ. தனிப் பூவாகவும் தனித்தனிக் காம்பில் இரண்டு மூன்று சேர்ந்தும் பூக்கும். இதன் புறவிதழ் குப்பி போன்ற கிண்ண அமைப் புடையது. 5 முதல் 7 வரை அகவிதழ்களைக் கொண்டது. முழு வடிவத்தில் மணி வடிவப் பூ, இதில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, மாதுளை என வகைகள் உள. முன்னிரண்டும் கணிச்சுவையால் அமைந்த பெயர்கள். பின்னது பூவின் சிறப்பால் அமைந்த பெயர். மாதுளங் கணிச் சாற்றின் இன்சுவையை உணர்ந்துள்ளோம். இச்சாறு பொதிந்த வித்து மாணிக்க முத்துமுத்தாக விளங்கும். சங்கப் பாடல்களிலோ காப்பியங்களிலோ இதன் பூ பற்றிய செய்தியில்லை. - பெரும்பாணாற்றுப் படையில் மாதுளங்காய் கறிக்குதவுவது பாடப்பட்டுள்ளது. சாவக நோன்பியான கோவலனுக்குச் சமைக்கக் கண்ணகியார்பால் மர்தரி வழங்கிய பொருள்களில் மாதுளங்காயும் 4 இடம் பெற்றது. இஃதொரு தாயகறியுணவு இக்கறிக்காவதைக் கொம்மட்டி மாதுளை' என்பர். ஆன்மீகத்தில், இப்பூவிற்கு இடமுண்டு. உமையம்மைக்கு "தாது மாதுளை (பூ) சாத்தத் தனங்கள் எய்தும்" -என்று புட்பவிதி செல்வங்கள் சேர்வதற்கு இப் பூ வழிபாட்டை ஒரு வழியாகக் காட்டுகின்றது. - இஃதொரு மருந்துப் பூவுமாகும். இதன் முகிழைக் காய வைத்துப் பொடி செய்து இருமலுக்குக் கொடுக்க அது நீங்கும். துெ திரு மானிக்கம் 1, 2, சிலம்பு 19:2; 2 பெரியாழ் : திரு உய்ய உலகு 10 * զւ, so: 40 3. , 8 பெரும்,ான் ; 806, 80? "... -്