பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/696

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
676


"இரத்திபுட்டி வல்ல பயன் உண்டாக்கும்; பூதலத்தில் மாதுளையின் பூ' -என அகத்தியர் குணபாடம் இப்பூவை வல்லமை வழங்கும் ஊட்ட உணவாகக் காட்டியுள்ளது. 83. கூடினர் துவரிதழ் மலர். செங்கிடை. செங்கிடை என்பது ஒரு முட்செடி. காட்டுச் செடி. முல்லை நிலத்தது. பிங்கலம் மட்டும் இதற்குக் கந்தூரி என்றொரு பெயரைத் தந்துள்ளது. மற்றையவை ஏதும் காட்ட வில்லை, இதனைக் கம்பர் பாடியுள்ளார். கார்காலத்தை வண்ணிக் கும் அவர், 'கூடினர் துவரிதழ் கோலங் கொண்டன - - சேடுறு நறுமுகை விரிந்த செங்கிடை'2 -என்றார் கலவியில் கூடிக்களித்தோரது சிவந்த இதழ்போன்ற அழகுடைய தாம். எனவே, செம்மை நிறப் பூ வாயிதழ் போன்று நீண்ட இதழுடையது. நெடுந் தொலைவு மணப்பது. அழகிய முகை கொண்டது. கார்காலத்தில் மலர்வது. செங்கிடை என்றால் வெண்கிடை உண்டோ எனில் உண்டு. ஆயின் அது வேறு. இது வேறு. கிடை என்றால் நெட்டி. அதன் வெண்மைப் பூ கருதி வெண்கிடை எனப்பட்டது, வெண் கிடிை நீரில் படர்வது. -- - 84. வணிகர் பட்ட மலர், எட்டி. எட்டி ஒரு காட்டு மரம். இதன் பழம் கிச்சிலி நிறத்தில் அழகானது. படு கசப்புள்ளது. "எட்டி பழுத்தென்ன?" என்று பாடுமளவு வெறுப்புக்கு உரியது. - 1 ಆಸೆ, $ 2912. 2. su ripá: 144-3, 4