பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

677

தொல்காப்பியத்தின் இகர ஈற்றுப் பெயரின் திரிபிற்கு 'எட்டிப் பூ சான்று காட்டப்பட்டது. இப் பூ சிறியது. தனிப் பூ புனல் வடிவத்தது. வெண்மை நிறங்கொண்டது. பல பூக்கள் செறிந்து கொத்தாகப் பூக்கும். கோட்டுப் பூவாகிய இது வேனிற் பருவத்துப் பூ. வணிகரில் சிறப்புற்றோர்க்கு மன்னன் தரும் பட்டம் “எட்டி’ எனப்படும். 'நீள்நில வேந்தனின் எட்டிப் பூப்பெற்று"2 என்றபடி பட்டத்தின் சின்னமாக எட்டிப் பூங்கொத்து போன்று பொன்னால் செய்து வழங்கினர். இப்பட்டத்தால் வணிகர் எட்டி’ என்றே பெயர் பெற்றனர். பட்டம் பெற்றோர் "எட்டி குமரன்”3 'எட்டி சாயலன்' எனப்பட்டனர். அன்னார்க்கு வழங்கப்பட்ட நிலம் "எட்டிப் புரவு' எனப்பட்டது. - இவ்வகையில் எட்டிப் பூ வணிகர் பட்ட ப் பூ'வாகிச் சிறப் புற்றது. . . 85. இறகு மலர், கொக்கிறகு, கொக்கிறகு மலர் தேவாரத்தில் பாடப்பட்டுள்ளது. "கொக்கின் இறகினொடு வன்னிபுக்க சடையார்'5 - -என்றார் ஞானசம்பந்தர். அப்பர் "கொக்கின் தூவலும் கூவிளங் கண் ணியும்' என்று பாடினார். இவைகொண்டு இப் பூ சிவனுக்குரியது என்றும் தூவிப் போற்றி வழிபடுதற்குப் பயன்பட்டது என்றும் அறிகின்றோம். - இஃதொரு செடி. கொக்கின் இறகு வடிவமைப்பில் கொத் தாகப் பூக்கும். வெண்மை நிறமுள்ளது. மன்னார்குடியில் பாமணியாற்றங்கரையில் உள்ள கைலாயநாதர் கோவிலில் இச் செடி உள்ளது. "கொக்கு மந்தாரை என்றும் வழங்குவர். , சொல்லளவுப் பொருள் கொண்டு இதனைப் gಖ7ಹಹಿ கருதாமல் கொக்கின் இறகு என்றும் கொக்கு உருவத்தில் I ಹ முெத்து 155 உரை, 4 ೨ಬಹಿ4 : 15 163, - 2 மணி : 22 : 118, தான். கே ஐயாறு 8 மணி .ே - ப், கே. நாரை 1