பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. இள முக்கு மலர்,

எள்.

எள்ளை இலக்கண நூல்கள் எண்' என்று பேகம், 'நூாவு’ என்பது இதற்கொரு பெயர். எள் ஒரு சிறு வித்து. நெய்ப்பிடிப்பு கொண்டது. எள் நெய்யே எண்ணெய் எனப் படுகின்றது. இவ்வித்து நூல்களில் மிகச்சிறிய அளவிற்கு எடுத்துக்காட்டாக "எள் துணை - எட்டுனை' எனப்படும். திருவள்ளுவர் இதன் பிளவை அளவாக்கி எட்பகவு அன்ன சிறுமைத்து’’’ என்றார். இஃதொரு சிறு செடி. இதன் பூ தனிப் பூ. வெண்மை நிறப் பூ, செந்நீல நிறத்தில் ஓரினம் உண்டு. இதன் அக விதழ் குழாய் வடிவங் கொண்டது. இப்பூ கவிழ்ந்து பூக்கும். ஒரு பக்கம் மட்டமாகவும் மறு பக்கம் இதழ் சற்று முன் புடைத்தும் முனை அகன்றும் மூக்குருவில் அமைந்தது. நெல் விளையும் மண்வளம் இதற்குரியதாகையால் மருத நிலத்தது. கோடை காலப் பூ. நிலப் பூ , - இப் பூவின் வடிவமைப்பு குமிழம்பூ வடிவமைப்பில் சிறியது. எனவே, இதனை மூக்கிற்கு உவமையாக 'குமிழ்போல் நிறம் படைத்தால் எள்ளும் சரியாம் இதற்கென்ன'2 -என நாகைக் காளிமுத்து என்னும் அம்மையார் தமது வருணகுலாதித்தன் மடலில் பாடினார். . பாவேந்தர் பாரதிதாசனாரோ, "எள்ளிளஞ் சிறிய பூவை எடுத்துவைத் திட்ட முக்கும்'3 எனச் சிறு குழந்தையின் மூக்கை வண்ணித்தார். இது மிகப் பொருத்தம், இளமூக்கிற்குப் பொருத்தமான மலர். இப் பூ கண் நோய்க்கு நல்ல மருந்து. 1 சூன் 1889 z: : : : .** * մե*ւ:ծաք՝ டி . ச. ன் 19 -