பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



91. கூந்தல் மலர்.

வாழை. வாழ் என்னும் அடியை உடையது வாழை. வழி வழி வாழ்வைக் குறிக்க 'வாழையடி வாழை என்னும் இதன் பெயர்த் தொடர் அமைந்தது. இஃது ஒரு முறையே பூத்துக் காய்க்கும். மரம் அழியும். இதனால் "தாயைக் கொன்றான்' என்றொரு பெயர் இதற்குண்டு. ஒரு குழந்தைப் பேற்றுடன் நின்றுவிடும் தாயை 'வாழை மலடி என்பர். இதன் தனிப் பூ மூன்று கூட்டுப் புறவிதழ்களையும் ஒர் அழகிய அகவிதழையும் கொண்டது. அகவிதழைக் கொப்பூழ் என்பர். இக்கொப்பூழைப் பாவேந்தர், "விரிவாழைப் பூவின் கொப்பூழ் வெள் விழி 1 -என்று சிறு குழந்தையின் வெள்ளைவிழிக்கு உவமையாக்கினார். ஒழுங்கு வரிசையாக இரண்டுகொண்ட இதன் கொத்தைச் சிப்பு என்பர். சீப்புகளை மடல்கள் பொதிந்திருக்கும் இப்பெருங் கொத்து அடுக்கு மாலை போன்றது. இதனால் மாலைக்குரிய சொல்லால் தார் (வாழைத்தார்) என்றனர். ஒருவகை வாழை, பூவின் பொதுப் பெயரால் 'பூவன்’ எனப்பட்டது. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு பிஞ்சாக, எஞ்சிய பூக்கள் உதிரும். இவ்வாறு உதிர்வதைத் தலைவனை இழந்த மகளிர் மார்பிலடித்துக் கொள்ளும்போது வளையல் முறிந்து சிதறுவதற்கு உவமையாக்கி, 'வாழைப் பூவின் வளைமுறி சிதற'2 என்றார் பெருஞ்சித்திரனார். உதிர்ந்தவை போக எஞ்சியுள்ள தொகுப்புப் 是曲 மகளிரது கூந்தலாம் ஒதிக்கு உவமையாக்கப்பட்டது. " . . - . ...வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி' (சிறுபாண் : 21, 22.) 'வாழை வையேந்து கொழுமுகை மெல்லியல் மகளிர் ஓதி அன்ன' (நற் 225) கானப் பல இலக்கியங்களும் பாடின. ஆ வக்கப்பே 0ே