பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686


நிலத்துத் திணைப்புனத்தில் தினை அறுவடைக்குப்பின் மறு விளைச்சலின்போது அவரையும் விதைக்கப்படும். அக் கொழுத்த கொடி தினைத் தட்டையில் படர்ந்து அரும் பணி பெய்யும் முன் பனிக்காலத்தில் பூக்கும். இதனால், அவரைப் பூ கொடிப் பூ; குறிஞ்சி நிலத்தது; முன்பணிப் பருவத்தில் பூக்கும். அப்பருவத்திலும் ("அற்சிற அரை நாள்") நள்ளிரவில் பூக்கும் என்பதைக் கழார்க்கீரன் எயிற்றியனார் காட்டினார். இது பவளம் போன்று செம்மை நிற மானது. செம்மையோடு கொத்தாகப் பூப்பதையும்கொண்டு, 'பைந்தனை அவரை பவளங் கோப்பவும்’’’ - எனப்பட்டது. செம்மை யுடன் இதன் வடிவமைப்பு, கிளியின் மூக்குபோன்று வளைவானது இதனை, 'பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரை கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு பன்மலர்' 3 - எனக் கொல்லன்அழிசி என்பார் வண்ணித்தார். எனவே, இதனைக் கிளிமூக்கு மலர் எனலாம். இதில் வெளிர் நீல நிறப் பூவும் உண்டு. மதுரைக்காஞ்சி 'மணிப் பூ அவரை' 4 என்றுள்ளது. இது தோட்டப் பயிராகவும் அமைந்தது. பிற்காலத்தார் மொச்சைஎன்றனர். மருத நிலவயற்பகுதிகளில் விளைவதை கழார்க் கீரன் எயிற்றியனார் பாடியுள்ளார். இங்கும் முன்பணிக்காலம் குறிக் கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அவரைப் பூ பற்றி எவரும் குறிப் பிட்டுப் பாடினார் அல்லர். இது சூடும் பூ அன்று. உணவிற் சுவை நல்கி வரும் இப்பூ கண்காட்சிக்கு எழில் வழங்குவது. 93. பன்றிப் பல் மலர். அகத்தி. 'அகத்தி’ என்றொரு பெயர் சங்கப்பாடல்களிலோ இடைக் காலக் காப்பிய இலக்கியங்களிலோ இல்லை. நிகண்டுகள் தாம் 'அகத்தி என்பதற்கு , "முனி, கரீரம், அச்சம்' என்னும் பெயர்களை வகுத்துள்ளன. இவைகளும் இலக்கிய ஆட்சிகொண்டன் அல்ல. 1 அகம் :294 11, 8 குறுந் :240 1 2. .ே சிறுபாண் :164 邬、