பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/714

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694


யாக உள்ளது. இதனையும் காட்சிக்கு அரிது எனலாம். இவ் வரிய மலராகப் பலா மலர் உள்ளது. இவை காண்டற்கு அரிய மலர்கள். பொருள் இருக்கிறது. அதற்குப் பெயரும் இருக்கிறது. ஆனால், பெயரின் விவரமும் மாற்றுப் பெயரும் ஒருமுகப்பட வில்லை. வேற்றுமுகங் காட்டுகின்றன. இவற்றால் குழப்பம் நேர் கின்றது. குழப்பத்தால் ஐயம் எழுகின்றது. இதுதான் அது’ என்று உறுதியாக அறிதல் அரிதாகின்றது. இவ்வகையில் சுள்ளி மலர், பாங்கர் மலர், அரிய மலர்களாகின்றன. பெயரளவில் பொருள் அறிமுகமாகியுள்ளது. அப்பெயர்ச் சொல்லின் பொருளை விரிப்பதன்றி வேறு விளக்கம் பெற வழி யில்லை. இவ்வகையில் அறிய அரிதாகும் மலர்கள் பயினியும் வடவனமும. பொருளின் சின்னம் தெரிகின்றது. சின்னத்தைப் பற்றி அறியும் அளவிற்குமேல் அப்பொருள்பற்றிய விளக்கத்தை அறிய இயலவில்லை. காவிதி மலர் இவ்வகையில் அரிய மலராகின்றது. இவை அறிதற்கு அரிய மலர்கள். மலர்களின் அரிய நிலையிலும் ஓரளவில் அறியும் நிலையை இலக்கியத் தொடர்கள் காட்டுகின்றன. அவைகொண்டு அரிய மலர்களை அணுக நேர்கின்றது. 1. குழையும் மலர். அனிச்சம். யாளி என்பது ஒரு வலிமைவாய்ந்த விலங்காம். எங்கே இருக்கிறது? கோவிற் சிற்பங்களில் காண்கின்றோம். அன்னம் ஒர் பறவையாம். கண்ணில் படுகின்றதா? ஒவியத்திலும் பாவியத் திலுந்தான் படுகின்றது. இப்பட்டியலில் அனிச்ச மலரையும் சேர்க்க மனம் வரவில்லை. அழிந்துவிட்டது என்று உறுதியாகக் கொள்ள முடியவில்லை. இதுதான் என்று கண்ணால் காணவும் வாய்ப்பில்லை. இலக்கியங்களிலும் ஆய்வாளரது கருத்துகளிலும்