பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

695


பட்டுத் தெரிப்பதிலும் பட்டொளியாகக் காட்டுபவர் திரு வள்ளுவர்தாம். 'நன்னீரை வாழி அனிச்சமே' என்னும் வாழ்த்துடன் “நின்னினும் மென்னிரள்" என்று அனிச்ச மலரின் மென்மையைக் காட்டினார், "அனிச்சமும் அன்னத்தின் தூவியும்’ என மென்மையை அன்னத்தின் துவியாகிய இனத்துடன் காட்டினார். காட்டி, "மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்' என்று அனிச்சத்தின் மென்மைக்கும் துர் துண்மை ஏற்றினார். அனிச்சம் என்று பொது வில் கூறப்பட்டுள்ளதால் அனிச்ச இலையா, அனிச்சந் தளிரா, அனிச்ச மலரா என்னும் ஐயத்தை நீக்க, ஒரு குறளின் தொடக்கத்தில் 'அனிச்சப் பூ' என்று வைத்து, . - "அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் துசுப்பிற்கு நல்ல படாஅ பரை' - என்றார். இக்குறளில் அமைத்த சொற்களால் அனிச்சப் பூ, காம்புள்ள தனிப் பூ என்றும், அக் காம்பு களையும் அளவினது என்றும், களைந்து சூடப்படும் என்றும், அஃதும் தலையில் பெய்து சூடப்படும் என்றும் விளக் கங்காட்டினார். இதனைப் பெய்வதால் இடை தாங்காமல் இற்று விடும் என்று காட்டி மலரைக் காட்டிலும் காம்பு கனமுள்ளது என்றும், அனிச்சமலர் மென்மையுடன் இலேசானது என்றும் சொல்லாமற் சொல்லியுள்ளார். பரிமேலழகர் மட்டும் கால்’ என்பதற்கு முகிழ்' என்று பொருள் எழுதிப் பூவைவிட முகிழ் கனமானதாகக் காட்டியுளார். காம்பு என்பது பொருத்தும். மேலே காணப்பட்ட மூன்று குறட்பாக்களில் மகளிரது மென்மையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளமை மிகைபடக் கூறியதாக லாம். ஆனால், அனிச்ச மலரைப் பொறுத்த அளவில் உயர்வு நவிற்சி அன்று; தன்மை நவிற்சியேயாகும். அதனால், அனிச் சத்தைப்பற்றிய ஒவ்வொரு சொல்லுக்கும் அழுத்தம் கொடுத்துப் பொருள் விரிப்பது பொருந்துவதாகும். - இவற்றிற்கு மேலும், மோப்பக் குழையும் அனிச்சம்" என்றார். இத்தொடர் அனிச்சத்தின் மென்மைக்கு மேலும் உறுதியளிப்பதுடன் மோப்பத் தாலேயே குழையும் என்னும் இதன் உயிர்த்தன்மையைக் காட்டு 1 குறள் : 1111 3 குறள் : 115, 2 குறள் 11:20 4 குறள் , 90.